- Advertisement -
இந்திய கிரிக்கெட்

உண்மையான்னு தெரியல.. ஆனா 2024 டி20 உ.கோ ஃபைனலில் இந்தியா ஜெய்க்க அவர் தான் காரணம்.. அர்ஷ்தீப் சிங்

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஜூன் மாதம் வென்றது ரசிகர்களால் மறக்க முடியாததாக அமைந்தது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற அந்தத் தொடரில் ஆரம்பம் முதலே அசத்திய இந்தியா ரோகித் சர்மா தலைமையில் சாம்பியன் பட்டம் வென்றது. குறிப்பாக மாபெரும் இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்து 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பை வென்றது.

அந்தப் போட்டியில் விராட் கோலி, அக்சர் பட்டேல் ஆகியோர் உதவியுடன் இந்தியா 177 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ட்ரிஷ்டன் ஸ்டப்ஸ், ஹென்றிச் க்ளாஸென் ஆகியோர் அதிரடியாக விளையாடி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தனர். அதனால் கடைசி 30 பந்துகளில் தென்னாப்பிரிக்காவுக்கு 30 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது.

- Advertisement -

ரிஷப் பண்ட் நகர்வு:

ஆனால் அப்போது ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்டிக் பாண்டியா ஆகியோர் அபாரமாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவை மடக்கி பிடித்தார்கள். குறிப்பாக க்ளாஸெனை 18வது ஓவரில் அவுட்டாக்கிய பாண்டியாவுக்கு எதிராக கடைசி ஓவரில் டேவிட் மில்லர் சிக்ஸர் அடித்தார். அதை பவுண்டரி எல்லையில் அற்புதமாக கேட்ச் பிடித்த சூரியகுமார் இந்தியாவின் சரித்திர வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

இந்நிலையில் அப்போட்டியில் 17வது ஓவரின் முடிவில் ரிஷப் பண்ட் தம்முடைய காயத்திற்காக எடுத்துக்கொண்ட இடைவெளி தான் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாக அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார். அந்த காயம் உண்மையா என்பது தமக்குத் தெரியாது என்று தெரிவிக்கும் அர்ஷ்தீப் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அந்த நேரத்தில் 30 ரன்கள் தேவைப்பட்ட போது ரிஷப் பண்ட் பாய் உடல்பயிற்சியாளரிடம் சிகிச்சை எடுத்ததால் சிறிய இடைவெளி ஏற்பட்டது”

- Advertisement -

இந்தியாவுக்காக நடிப்பு:

“அது போட்டியில் திருப்பு முனையாக இருக்கும் என்று நான் கருதினேன். ஒருவேளை அது தந்திரோபாய நகர்வாக இருக்கலாம் என்று நினைத்தேன். அது உண்மையான சிகிச்சையா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் அதற்குப்பின் ஹர்திக் பாய் விக்கெட் எடுத்தார். ஜஸ்ப்ரித் பாய் அபரிதமான அழுத்தத்தை உண்டாக்கினார். அங்கே தான் இங்கிருந்து நம்மால் இந்தப்போட்டியை வெல்ல முடியும் என்று நாங்கள் நம்பினோம்”

இதையும் படிங்க: ஜஹீர் கான் மாதிரி திறமையுடைய அவர் ஆஸியில் விளையாடிருக்கனும்.. இதையாச்சும் செய்ங்க.. ரெய்னா கோரிக்கை

“அந்த நேரத்தில் நாங்கள் எங்களுடைய திட்டத்தை பின்பற்றி நன்றாக செயல்படுத்தினோம். அதன் பயனாக நாங்கள் விரும்பிய முடிவு கிடைத்தது” என்று கூறினார். முன்னதாக தென் ஆப்பிரிக்காவின் வேகத்தை உடைப்பதற்காக வேண்டுமென்றே அப்படி லேசாக காயமடைந்தது போல் நடித்து முதலுதவி சிகிச்சை எடுத்ததாக ரிஷப் பண்ட் கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -