தனியாக சேனல் ஆரம்பித்த காரணம் கேட்டு சிரித்த டேல் ஸ்டைன்.. வாய்ப்பை பயன்படுத்துவது பற்றி அர்ஷ்தீப் பேட்டி

Arshdeep Singh 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 101 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்ற இந்தியா முன்னிலைப் பெற்றுள்ளது. கட்டாக் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு பவுலிங் துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா உட்பட அனைவரும் முக்கிய பங்காற்றினார்கள்.

குறிப்பாக இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் 2.3 ஓவரில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 2022இல் அறிமுகமான அவர் 3 வருடத்திற்குள் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய பவுலராக வரலாற்றுச் சாதனையைப் படித்துள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையில் மட்டும் 17 விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினர்.

- Advertisement -

யூடியூப் சேனல்:

இருப்பினும் ராகுல் டிராவிட் போல பயிற்சியாளர் கெளதம் கம்பீர் அவருக்கு தொடர்ச்சியாக வாய்ப்பளிப்பதில்லை. மாறாக பேட்டிங் செய்யத் தெரியவில்லை என்பதை வைத்து அவரை கழற்றி விடும் கம்பீர் ஹர்ஷித் ராணாவுக்கு அதிக ஆதரவளிக்கிறார். ஆனால் அதற்கெல்லாம் அதிருப்தியை வெளிப்படுத்தாத அர்ஷ்தீப் கிடைக்கும் வாய்ப்புகளில் அசத்தி வருகிறார்.

இதற்கிடையே வெறும் 26 வயது மட்டுமே நிரம்பியுள்ள அவர் யூடியூப் பக்கத்தில் தமக்கென்று ஒரு சேனலை துவங்கியுள்ளார். இதுவரை அவருடைய சேனலை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். சமீபத்தில் விராட் கோலியுடன் சேர்ந்து அவர் பதிவிட்ட வீடியோவை 13 லட்சம் மக்கள் பார்த்துள்ளார்கள். இந்நிலையில் கிரிக்கெட்டில் பெரிதாக சாதிப்பதற்கு முன் யூடியூபில் சேனலை துவங்கியதற்கான காரணம் என்னவென்று அவரிடம் வர்ணனையாளர் மற்றும் தென்னாபிரிக்க ஜாம்பவான் டேல் ஸ்டைன் கேட்டார்.

- Advertisement -

சிரித்த ஸ்டைன்:

அதற்கு அர்ஷ்தீப் கொடுத்த பதில் பின்வருமாறு. “2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரின் முதல் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்காது என்று தெரிந்த போது என்னுடைய அறையில் மிகவும் சலிப்புடன் உட்கார்ந்திருந்தேன். அப்போது தான் என்னுடைய யூடியூப் சேனலை துவங்கினேன். கடைசியில் அது எனக்கு நல்ல மாறுவேடத்திற்கான ஆசீர்வாதமாக அமைந்தது” என்று கூறினார்.

இதையும் படிங்க: அபிஷேக் சர்மாவின் சாதனையை முறியடித்து புதிய சாதனையை நிகழ்த்திய திலக் வர்மா – விவரம் இதோ

அதைக் கேட்டு ஸ்டைன் மற்றும் ராபின் உத்தப்பா சிரித்து மகிழ்ந்தார்கள். தொடர்ந்து அர்ஷ்தீப் பேசியது பின்வருமாறு. “எப்போதும் எதையாவது நான் நேர்மறையாக பார்க்க முயற்சிக்கிறேன். சில நேரங்களில் நீங்கள் இந்த அளவில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றதற்கே நன்றியுடையவனாக கருத வேண்டும். நீங்கள் உங்களது வாய்ப்புக்காகவும் காத்திருக்க வேண்டும். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

Advertisement