நான் 100 விக்கெட்ஸ் எடுத்து பந்து வீச்சில் அசத்த அவர் தான் காரணம்.. யூடியூப்பில் பார்ப்பேன்.. அர்ஷ்தீப் பேட்டி

Arshdeep Singh
- Advertisement -

பஞ்சாப்பைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அர்ஷ்தீப் சிங் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக உருவாகி வருகிறார். 2022ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 9 ஒருநாள் போட்டிகளில் 14 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். அதை விட டி20 கிரிக்கெட்டில் 65 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 100 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.

அறிமுகமான 3 வருடங்களுக்குள் ஜஸ்ப்ரித் பும்ரா உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்களை முந்திய அவர் 100 விக்கெட்டுகள் எடுத்தது உண்மையிலேயே பாராட்டுக்குரியதாகும். குறிப்பாக 2024 டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை எடுத்த அவர் இந்தியா கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினர். இருப்பினும் அவருக்கு அணியில் நிலையான இடம் கிடைக்கவில்லை என்பது ஏமாற்றத்துக்குரிய விஷயமாக இருக்கிறது.

- Advertisement -

வெற்றிகரமான அர்ஷ்தீப்:

இந்நிலையில் தம்முடைய வெற்றிகரமான பந்து வீச்சுக்கான பாராட்டுக்கள் ஜஸ்ப்ரித் பும்ராவை சேரும் என்று அர்ஷ்தீப் சிங் தெரிவித்துள்ளார். மேலும் யூடியூப் பக்கத்தில் வாசிம் அக்ரம், ஜஹீர் கான் போன்ற ஜாம்பவான்களின் வீடியோக்களை பார்த்து தம்மை மெருகேற்றுவதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அர்ஷ்தீப் பேசியது பின்வருமாறு.

“என்னுடைய பந்து வீச்சுக்கான அனைத்து பாராட்டுக்கள் ஜஸ்ப்ரித் பும்ரா பாயை சேரும். நீங்கள் என்னிடம் யார்க்கர் பட்டனை அழுத்தும் போது ஒன்று பந்து பேட்ஸ்மேனை அவுட்டாகும் அல்லது சிக்ஸர் செல்லாமல் இருக்கும். அதை என்னால் வெற்றிகரமாக செய்ய முடிந்தால் நீங்களும் என்னை நல்ல பவுலர் என்ற பிரிவில் போடலாம். எனவே நான் பந்து வீசும் விதத்திற்கான பாராட்டுக்கள் ஜஸி பாயை சேரும்”

- Advertisement -

உதவும் யூடியூப் வீடியோக்கள்:

“யூடியூப் பக்கத்தில் இருக்கும் இடது கை வேகப்பந்து வீச்சாளர்களின் வீடியோக்களை நான் பார்த்துள்ளேன். யார்க்கர் பந்துகளில் முன்னேற விரும்பினால் அதற்காக வாசிம் அக்ரம் வீடியோக்களை பார்ப்பேன். அந்த அனைத்து வீடியோக்களிலும் அவர் ஸ்டம்ப்புகளை மட்டுமே குறிவைத்து பந்து வீசினார். இடது கை வேகப்பந்து வீச்சாளராக அவருடைய வலது கை பேட்ஸ்மேனுக்கு எதிராக இன்ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளை அதிகம் பார்த்து மகிழ்ந்தேன்”

இதையும் படிங்க: இனிமேல் விராட், ரோஹித் சுயநலமாக இதை செய்யனும்.. இல்லனா அந்த வாய்ப்பை பறிச்சுடுவாங்க.. உத்தப்பா அட்வைஸ்

“அவரிடம் அற்புதமான திறன் இருந்தது. ரிவர்ஸ் ஸ்விங் பந்துகளுக்காக ஜஹீர் கான் வீடியோக்களை பார்ப்பேன். அந்த திறனுக்கு நீங்கள் நிறைய முயற்சிகளை போட வேண்டும். ஒருமுறை கற்றுக் கொண்டால் அது பெரியதாக தோன்றாது என்று மலிங்காவின் பேட்டிகளைப் பார்த்தால் புரியும். நீங்கள் அதிகமாக பயிற்சி எடுக்கும் போது அதிகம் சாதிக்க முடியும் என்று என்னுடைய தந்தை மற்றும் பயிற்சிளர்கள் சொல்வார்கள். நீங்கள் 80% முயற்சியுடன் பயிற்சி எடுத்தால் களத்தில் பாதி மட்டுமே வெளிப்படும்” என்று கூறினார்.

Advertisement