பும்ராவுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக விளையாடப்போகும் வீரர் யார்? – விவரம் இதோ

Bumrah IND
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது அந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இரண்டாவது போட்டிக்காக தற்போது தீவிரமாக தயாராகி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

பும்ராவுக்கு பதிலாக விளையாடப்போவது யார்? :

இதன் காரணமாக தற்போது இரு அணி வீரர்களும் அங்கு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிற்கு ஓய்வு வழங்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் விளையாடிய பும்ரா சிறப்பாக செயல்பட்டிருந்தாலும் அந்த போட்டியின் போது கிட்டத்தட்ட 44 ஓவர்களை வீசியிருந்தார். ஏற்கனவே காயத்திற்கு பிறகு மீண்டு வந்த ஜஸ்ப்ரீத் பும்ரா தற்போது தான் முழு உடற்தகுதியுடன் விளையாடி வருகிறார்.

எனவே அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வு வழங்க உள்ளதாக தெரிகிறது. ஏனெனில் தொடர்ச்சியாக அவர் விளையாடும் பட்சத்தில் காயத்தில் சிக்க அதிக வாய்ப்பு இருப்பதால் அவரை மிகச் சரியாக கையாள வேண்டும் என்று இந்திய அணியின் நிர்வாகம் நினைக்கிறது.

- Advertisement -

அந்த வகையில் நடைபெற்று வரும் இந்த தொடரில் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கும் அவர் முதல் போட்டியில் விளையாடி விட்டதால் இரண்டாவது போட்டியில் ஓய்வு வழங்கப்பட்டு பின்னர் மூன்றாவது போட்டியிலும், ஐந்தாவது போட்டியிலும் விளையாட வைக்கப்படலாம் என்று தெரிகிறது. அதன் அடிப்படையில் எதிர்வரும் இரண்டாவது போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுக்கும் பட்சத்தில் அவருக்கு பதிலாக விளையாடப்போகும் இந்திய அணியின் மாற்றுவீரர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜஸ்ப்ரீத் பும்ராவுக்கு கண்டிப்பா ஓய்வு.. காரணம் இதுதான் – விவரம் இதோ

அப்படி பும்ரா ஓய்வெடுக்கும் பட்சத்தில் இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் அவரது இடத்தில் அறிமுகமாக அதிகமாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான அவர் இதுவரை 63 போட்டிகளில் விளையாடி 99 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ள வேளையில் அவருக்கு இந்த டெஸ்ட் அறிமுக வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.

Advertisement