அவரோட கம்பேர் பண்ணி கேரியரை முடிச்சுறாதிங்க, திறமையான அர்ஷ்தீப் சிங்கை பாராட்டி – ஜான்டி ரோட்ஸ் சொல்வது என்ன

Arshdeep Singh Jonty Rhodes
Advertisement

ஆஸ்திரேலியாவில் பரபரப்பாக நடைபெற்று முடிந்த 2022 ஐசிசி டி20 உலகக்கோப்பையில் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் தோற்று வெறும் கையுடன் திரும்பியுள்ளது. இந்த தொடரில் விராட் கோலி, சூரியகுமார் யாதவ் உட்பட ஒரு சிலரை தவிர்த்து கேப்டன் ரோகித் சர்மா போன்ற பெரும்பாலான சீனியர் கிரிக்கெட் வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்வியை பரிசளித்தது. அதனால் அடுத்த டி20 உலக கோப்பைக்கு முன்பாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து புதிய அணியை உருவாக்கும் வேண்டுமென்ற கோரிக்கை குவிந்துள்ளது.

Arshdeep Singh 1

முன்னதாக இந்த உலகக் கோப்பையில் பந்து வீச்சு துறையில் முகமது ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகிய சீனியர் பவுலர்களை மிஞ்சிய இளம் வீரர் அர்ஷிதீப் சிங் 10 விக்கெட்களை எடுத்து அதிக விக்கெட் எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான செமி ஃபைனல் தவிர்த்து எஞ்சிய போட்டிகளில் சிறப்பாக பந்து வீசிய அவர் புதிய பந்தை ஸ்விங் செய்து குயின்டன் டீ காக், பாபர் அசாம் போன்ற தரமான வீரர்களை அவுட் செய்தது அனைவரது பாராட்டுகளை பெற்றது. மேலும் டெத் ஓவர்களிலும் முடிந்தளவுக்கு சிறப்பாக செயல்படும் அவர் இந்தியாவின் வருங்கால நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக தன்னை நிரூபித்து வருகிறார்.

- Advertisement -

கம்பேர் பண்ணாதீங்க:

குறிப்பாக ஜாம்பவான் ஜாகீர் கானுக்கு பின் இந்தியாவின் நீண்ட கால தேடலான இடது கை வேகப்பந்து வீச்சாளருக்கு வரப்பிரசாதமாகும் வகையில் அவர் சிறப்பாக செயல்பட தொடங்கியுள்ளார். அதனால் இந்தியாவின் அடுத்த ஜாகீர் கான் என்று நிறைய முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை பெற்று வரும் அவர் வரலாற்றின் மிகச்சிறந்த ஸ்விங் இடது கை வேகப்பந்து வீச்சாளராக போற்றப்படும் வாசிம் அகரம் போலவே செயல்படுவதாக சில முன்னாள் பாகிஸ்தான் வீரர்களே பாராட்டி வருகிறார்கள். ஆனால் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் அர்ஷிதீப் சிங் திறமையான பவுலர் என்று பாராட்டும் தென்னாபிரிக்க ஜாம்பவான் ஜான்டி ரோட்ஸ் அதற்காக இப்போதே அவரை ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டு அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Arshdeep-Singh

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை ஸ்விங் செய்வதில் சுல்தான் என்று போற்றப்படும் ஜாம்பவான் வாசிம் அக்ரமுடன் ஒப்பிடுவது அர்ஷ்தீப் மீது அதிகப்படியான அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். ஏனெனில் மிகச்சிறந்த கேரியரை உருவாக்குவதற்கான அற்புதமான திறமை அவரிடம் உள்ளது. கடந்த 2 வருடங்களில் அர்ஷிதீப் சிங் இந்திய வேகப் பந்து வீச்சாளர்களில் முக்கியமானவராக வளர்ந்து வருகிறார். குறிப்பாக பும்ரா எப்படி விரைவில் வளர்ந்தாரோ அதே போல் அவரும் விரைவாக கற்றுக் கொண்டு வேகமாக வளர்ந்து வருகிறார்”

- Advertisement -

“ஆரம்பத்திலேயே ஸ்விங் செய்யும் அவர் டெத் ஓவர்களிலும் அசத்துகிறார். பவர்பிளே ஓவர்களில் நல்ல கட்டுப்பாட்டை வைத்துள்ள அவர் வாசிம் அக்ரம் போல தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பந்து வீசுகிறார். அந்த வகையில் வருங்காலத்தில் அவர் அற்புதமான கேரியரை உருவாக்குவதற்கு அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அதற்காக ஏற்கனவே விளையாடிய ஒருவருடன் நீங்கள் அவரை ஒப்பிடுவது தேவையற்ற அழுத்தத்தை உருவாக்கி சுமாராக செயல்பட வைத்து விடும். என்னைக் கேட்டால் அவர் அர்ஷிதீப் சிங்காக வரவேண்டும் என்றே கூறுவேன்” என கூறினார்.

Rhodes

முன்னதாக பஞ்சாப் அணியில் ஃபீல்டிங் பயிற்சியாளராக செயல்பட்ட ஜான்டி ரோட்ஸ் ஆரம்ப காலம் முதலே அர்ஷிதீப் சிங் எந்தளவுக்கு கடினமாக உழைத்து இன்று இந்திய அணியில் இடத்தை பிடித்துள்ளார் என்பதை அருகில் இருந்து பார்த்தவர். அதனால் இன்னும் பெரிய அளவில் வருவதற்கு அவரிடம் திறமை உள்ளதாக தெரிவிக்கும் ஜான்டி ரோட்ஸ் அதற்கு முன்பாக வாசிம் அக்ரம் போன்ற ஜாம்பவான்களுடன் ஒப்பிட்டு அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். அப்படி இந்த உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட அர்ஷிதீப் சிங் அடுத்ததாக நியூசிலாந்து மண்ணில் நடைபெறும் டி20 தொடரில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Advertisement