- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs SA : இந்த கண்டத்துக்கு முடிவே இல்லையா – மோசமான வரலாற்று சாதனை படைத்த இளம் இந்திய பவுலர், அலறும் ரசிகர்கள்

அசாம் மாநிலம் கவுகாத்தியில் அக்டோபர் 2ஆம் தேதியன்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 2வது போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா போராடி வென்றது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்த தென் ஆப்பிரிக்க பவுலர்களை ஆரம்பம் முதலே சரமாரியாக அடித்த இந்தியா 20 ஓவர்களில் 237/3 ரன்கள் குவித்து மிரட்டியது. குறிப்பாக 96 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளமிட்ட கேப்டன் ரோகித் சர்மா 43 (37) ரன்களும் அவருடன் அதிரடி காட்டிய கேஎல் ராகுல் 57 (28) ரன்களும் குவித்து அவுட்டானார்கள். அதை வீணடிக்காமல் 3வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சூர்யகுமார் யாதவ் 5 பவுண்டரி 5 சிக்சருடன் 61 (22) ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.

இறுதியில் மறுபுறம் அதிரடி காட்டிய விராட் கோலி தனது பங்கேற்க 49* (28) ரன்கள் எடுக்க தினேஷ் கார்த்திக் 17* (7) ரன்கள் குவித்து பினிஷிங் கொடுத்தார். அதை தொடர்ந்து 238 என்ற மெகா இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 0, ரோசவ் 0, மார்க்ரம் 33 (19) என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 47/3 என தடுமாறியது. அப்போது களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் டேவிட் மில்லர் மறுபுறம் நின்ற குயின்டன் டி காக் உடன் ஜோடி சேர்ந்து இந்திய பவுலர்களை பந்தாட துவங்கினார்.

- Advertisement -

தொடரும் கண்டம்:
அதில் சரவெடியாக செயல்பட்ட மில்லர் 4வது விக்கெட்டுக்கு 174 ரன்கள் சாதனை பார்ட்னர்ஷிப் அமைத்து 8 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 106* (47) ரன்கள் எடுத்த போதிலும் மறுபுறம் சற்று பொறுமையாக விளையாடிய டீ காக் 3 பவுண்டரி 4 சிக்சருட்ன 69* (48) ரன்கள் எடுத்தார். அதனால் வெற்றியை நெருங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்களில் 221/3 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது. அதனால் முதல் போட்டியில் ஏற்கனவே வென்றிருந்த இந்திய 2 – 0* (3) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

ஆனாலும் என்ன பயன் என்பது போல் இந்த போட்டியில் பொறுப்புடன் செயல்பட வேண்டிய இந்திய பவுலர்கள் ரன்களை வள்ளலாக வாரி வழங்கி வெற்றியை தாரை வார்க்க பார்த்தனர். குறிப்பாக தீபக் சஹர் தவிர ஏனைய பவுலர்கள் அனைவரும் 9க்கும் மேற்பட்ட எக்கனாமியில் ரன்களை அள்ளி அள்ளிக் கொடுத்தனர். அதிலும் குறிப்பாக இந்தியாவின் லேட்டஸ்ட் நம்பிக்கை நட்சத்திர டெத் பவுலர் என அறியப்படும் அர்ஷிதீப் புதிய பந்தை ஸ்விங் செய்து தன்னுடைய முதல் ஓவரில் பவுமா, ரோசவ் ஆகியோரை டக் அவுட் செய்ததற்கு நேர்மாறாக கடைசிகட்ட ஓவரில் ரன்களை வாரி வழங்கினார்.

- Advertisement -

அதுவும் 19வது ஓவரில் எதிரணிக்கு 58 ரன்கள் தேவைப்பட்ட போது 1 நோ-பால் மற்றும் 1 ஒய்ட் உட்பட 1, 6, 4, 4, 2, 6 என 26 ரன்களை அவர் வாரி வழங்கியது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. சமீபத்திய ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் இவரை விட அனுபவம் வாய்ந்த புவனேஸ்வர் குமார் இதே 19வது ஓவரில் 19, 14 ரன்களை வாரி வழங்கி விமர்சனங்களை சந்தித்தார். ஆனால் மொகாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் கொஞ்சமும் முன்னேறாத அவர் மீண்டும் 19வது ஓவரில் 18 ரன்களை கொடுத்து வெற்றியை தாரை வார்த்தார்.

அதனால் இந்தியாவுக்கு கண்டமாக பார்க்கும் அதே 19வது ஓவரில் புவனேஷ்வர் குமாரை விட ஆசிய கோப்பையில் அசத்தலாக பந்துவீசிய இவர் நேற்று அவரை விட மோசமாக 26 ரன்களை வாரி வழங்கியது ரசிகர்களுக்கு மீண்டும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் புவனேஸ்வர் குமார் போலவே இவரும் சரிப்பட்டு வர மாட்டார் போல என்று கவலை தெரிவிக்கும் ரசிகர்கள் இந்த 19வது ஓவர் கண்டத்திற்கு முடிவில்லையா என்று சமூக வலைதளங்களில் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதைவிட நேற்றைய போட்டியில் 2 விக்கெட் எடுத்தாலும் 4 ஓவரில் 62 ரன்களை கொடுத்த அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் 60+ ரன்களை கொடுத்த முதல் இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற படுமோசமான சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. அர்ஷிதீப் சிங் : 62, 2022*
2. ஜோகிந்தர் சர்மா : 57, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக, 2007

விரைவில் நடைபெறும் உலகக் கோப்பையில் பும்ரா காயத்தால் வெளியேறியுள்ள நிலையில் டெத் ஓவர்களை ஓரளவு சமாளிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர் கடைசி நேரத்தில் இப்படி மோசமாக செயல்படுவது ரசிகர்களுக்கு மேலும் கவலையை கொடுத்துள்ளது.

- Advertisement -
Published by