சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்தது போலவே அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் பல சாதனைகள் படைப்பார் என்று கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. தற்போது வரை அவர் உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். மேலும் 20 வயதான அவர் இந்தியாவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் கூட தேர்வாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் தொடர்ந்து போராடி வருகிறார். இவர் இடது கை வேகப்பந்து வீச்சும், இடதுகை பேட்டிங்கும் செய்யக்கூடிய ஆல்ரவுண்டர் ஆவார். இந்நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் அவருக்குப் பிடித்த ஃபேவரட் ஆல்ரவுண்டர் யார் என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த அவர் இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் தான் எனக்கு பிடித்த ஆல்ரவுண்டர் என்று கூறியுள்ளார். ஏற்கனவே 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெற்றபோது இங்கிலாந்து வீரர்களுக்கு வலைப்பயிற்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் பந்து வீசியது குறிப்பிடத்தக்கது .
மேலும், அவ்வப்போது இங்கிலாந்துக்குச் சென்று கிரிக்கெட் தொடர்பான நுணுக்கங்களை அங்கு கற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. சர்வதேச அரங்கில் எப்படியாவது இந்திய அணிக்காக விளையாடி தனது தந்தையின் பெயரை காப்பாற்ற கடுமையாக உழைத்து வருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர் பொறுத்திருந்து பார்ப்போம் ஜாம்பவானின் வாரிசு சாதிக்கிறதா என்று.
இங்கிலாந்தில் நடைபெற்ற வலைப்பயிற்சியின் போது அந்த அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோவிற்க்கு அர்ஜுன் டெண்டுல்கர் அசத்தலாக ஒரு பவுன்சர் வீசியதில் காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.