சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக 24 வருடங்கள் விளையாடி பல்வேறு சாதனைகள் புரிந்தவர். அவருக்கு அர்ஜுன் டெண்டுல்கர் என்ற ஒரு மகன் இருக்கிறார். தனது தந்தையைப் போலவே கிரிக்கெட்டில் கால்பதித்து பல சாதனைகள் புரிய வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருக்கிறது. தனது தந்தையின் பெயரை காப்பாற்ற கடந்த 10 ஆண்டுகளாக கிரிக்கெட் பயிற்சி செய்து வருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர். மேலும் கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரிலும் இவர் மும்பை அணியின் வலைப்பயிற்சி பந்துவீச்சாளராக செயல்பட்டார்.
19 வயதான அவர் உள்ளூர் போட்டிகளில் கடுமையாக பயிற்சி செய்து விளையாடி வருகிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளராக இருக்கும் இவர் ஒரு ஆல்ரவுண்டர் ஆகவும் செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோருக்கான தொடரில் சிறப்பாக விளையாடி தனது பெயரை நிலை நாட்டியவர். இதனைத் தொடர்ந்து எப்படியாவது சீனியர் அணியில் இடம் பெற்று விளையாட வேண்டும் என்று பயிற்சி செய்து வருகிறார்
மும்பையை சேர்ந்த இவர் மும்பை சீனியர் அணியில் விளையாட தற்போது தேர்வாகி இருக்கிறார். இந்தியாவின் உள்ளூர் போட்டிகளை சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வரும் 10ம் தேதி தொடங்க போகிறது. ஏற்கனவே சூர்யகுமார் யாதவ் தலைமையிலான மும்பை அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மொத்தம் 20 பேர் கொண்ட மும்பை அணி அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த அணியின் வீரர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்திருக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இதற்கு அனுமதி அளித்தது. இதனை தொடர்ந்து கூடுதலாக அர்ஜூன் தெண்டுல்கர், ஹனகவாடி ஆகியோர் மும்பை மாநில அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர். 19 வயதான இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஜுன் டெண்டுல்கர் இதுவரை சீனியர் அணியில் விளையாடியதில்லை.
முதன்முதலாக மும்பை சீனியர் அணியில் இடம் பிடித்திருக்கிறார் அவர் நன்றாக விளையாட வாழ்த்துக்களை தெரிவிப்போம். இருப்பினும் அவர் தனது திறமையால் மட்டுமே அவர் அணியில் இடம் பிடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.