இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்காலமாக அண்டர் 19 போட்டிகள் கருதப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கூட அண்டர் 19 போட்டிகளில் விளையாடிய பல இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி அசத்தினார்கள். தற்போது உண்டெர் 19 அணியில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக அண்டர் 19 அணிக்காண வீரர்களை தேர்வு செய்வதற்காக, பல்வேறு 19 வயதிற்கு உட்பட்ட இளம் வீரர்களுக்கு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சியில் இந்திய கிரிக்கெட் உலகின் ஜம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்திருந்தார். இந்நிலையில் இன்று(ஜூன்7) இலங்கை செல்லும் இந்திய அண்டர் 19 அணியில் இடம்பெற்றுள்ளார்.
கடந்த சில மாதங்களாக இந்திய இளம் அணியில் விளையாடி வந்த அர்ஜுன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 தொடரில் விளையாடிய அர்ஜுன், 27 பந்துகளில் 48 ரன்களை எடுத்திருந்தார். மேலும் பந்திவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டு 4 ஒவர்களில் 4 விக்கெட்டுகளையும் வீழ்ந்தி அசத்தினார். இதனால் இவருக்கு அண்டர் 19 பயிற்சி அணியில் இடமளிக்கபட்டது.
கடந்த சில நாட்களாக இந்திய அண்டர் 19 அணியில் எப்படியாவது இடம் பெற்றுவிட வேண்டும் என்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மற்றவர்களை போலவே தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வந்தார் அர்ஜுன். இந்நிலையில் நேற்றைய தினம் பயிற்சி அணியில் சேர்க்கப்பட்டிருந்த அர்ஜுன், பயிற்சியில் சிறப்பாக செயல்ப்பட்டு வந்ததால் இன்று இலங்கை செல்லும் யூ19 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதன் மூலம் தனது முதல் யூ19 போட்டிகளில் விளையாட மிகுந்த ஆர்வமுடன் காத்துக் கொண்டிருக்கிறார் அர்ஜுன்.