அறிமுகமான முதல் போட்டியில் டக்அவுட் ஆனார் சச்சின் மகன்..! – வைரல் வீடியோ

arjunsachin
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் என்று கருதப்படும் சச்சினின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் யு19 அணியில் சேர்ந்தவுடன் கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை முழுவதும் அவர் மீது தான் இருக்கின்றது. தற்போது இலங்கைக்கு யு19 அணிக்கு எதிரான போட்டியில் விளையாடி வரும் அர்ஜுன் டெண்டுல்கர் தனது முதல் போட்டியில் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகியுள்ளார்.
arjuntendulkar
இலங்கை சென்றுள்ள இந்தியா யு19 அணி இலங்கைக்கு எதிராக 2 டெஸ்ட் மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரின் முதல் போட்டி கடந்த 17 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் அர்ஜுன் டெண்டுல்கர் 11 ஓவர்களை வீசி ஒரு விக்கெட்டை எடுத்திருந்தார்.

அதே போல இந்திய அணி முதல் இன்னிங்ஸில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 589 ரன்களை எடுத்திருந்தது. இதில் சச்சின் மகன் அர்ஜுன் 11 பந்துகளை விளையாடி ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

இதே போல தான் சச்சின் விளையாடிய தனது முதல் ஒரு நாள் போட்டியில் டக் அவுட் ஆனார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது அர்ஜுன் டெண்டுல்கர் அவுட்டான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -
Advertisement