மைதானத்துக்கு வெளியில் ஜூனியர் சச்சின் செய்த செயல்.? புகைப்படத்தை வெளியிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்!

aarjuntendulkar
- Advertisement -

சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜுன் டெண்டுல்கர் இங்கிலாந்து எம்.சி. சி ஜூனியர் அணியில் பயிற்சி பெற்று வருவது நாம் அறிந்ததே இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றுவருகிறது போட்டி மழையால் பாதிக்க பட்டபோது மைதான ஊழியர்களுடன் இணைந்து உதவி செய்ததை லார்ட்ஸ் நிர்வாகம் பாராட்டியது

arjun radio

- Advertisement -

இந்திய அணி வலைப்பயிற்சியின் போதும் கூட இந்திய வீரர்களுக்கு அர்ஜுன் டெண்டுல்கர் பந்துவீசினார் இந்நிலையில் மைதானத்துக்கு வெளியே அர்ஜுன் டெண்டுல்கர் ரேடியோ விற்று கொண்டு இருக்கும் படியான ஒரு புகைப்படத்தை இந்தியா அணியின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் ட்வீட்டரில் புகைப்படத்துடன் வெளியிட்டார். அவரது இந்த ட்வீட் பலராலும் பேசப்பட்டு வருகிறது.

“அர்ஜுன் டெண்டுல்கர் ரேடியோ விற்று கொண்டிருக்கிறார் 50 விற்றுவிட்டது வெகு சில ரேடியோக்களே மீதம் உள்ளன வாங்கி கொல்லுங்கள் ” என்று அவர் குறிப்பிட்டுள்ளார் இதனை அவர் அர்ஜுன் டெண்டுல்கருடன் எடுத்த புகைப்படத்தோடு அவர் வெளியிட்டுள்ளார் இந்த ட்வீட் இப்போது வைரலாகி வருகிறது

எதற்காக அவர் ரேடியோ விற்பனை செய்தார் என்று உறுதியாக தெரியவில்லை. அர்ஜுன் டெண்டுல்கர் இந்தியா 19 வயதுக்கு உட்பட்ட அணியில் உள்ளார் மேலும் சிறப்பு பயிற்சிக்காக லண்டனில் பயிற்சி பெற்றுவருகிறார். இவர் ஒரு ஆல்ரவுண்டராக வலம்வருவர் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement