இந்திய அணியை வீழ்த்த இரண்டு மேட்ச் வின்னர்களை இறக்கிய இங்கிலாந்து அணி – விவரம் இதோ

England
- Advertisement -

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பிய இந்திய அணி அடுத்தாக பிப்ரவரியில் இங்கிலாந்து அணியுடன் மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இங்கிலாந்து அணி தற்போது இலங்கை அணியுடன் 2 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன்பின் இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் என மிகப்பெரிய தொடரில் விளையாட உள்ளது.

England

- Advertisement -

இதில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தொடங்கவுள்ளது. இதில் மூன்றாவது டெஸ்ட் போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த திட்டமிட்டுள்ளது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் சென்னையிலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் அகமதாபாத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மார்ச் 12ம் தேதி முதல் அகமதாபாத் மைதானத்திலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மார்ச் 23ம் தேதி முதல் புனே மைதானத்திலும் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த தொடருக்கான பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ வெளியிட்டது. இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இஷாந்த் சர்மா, அக்சர் படேல், ஹார்டிக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர். இதைத்தொடர்ந்து தற்போது இங்கிலாந்து அணியும் 16 வீரர்கள் கொண்ட தங்களது டெஸ்ட் அணியை வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜோ ரூட் செயல்படுகிறார். தற்போது விளையாடி வரும் இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து அணியில் இடம்பெறாத பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஆர்ச்சர் இந்த அணியில் இடம்பெற்று இருக்கின்றனர். சாம் கரன், பேர்ஸ்டோவ் மற்றும் மார்க்வுட் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார்கள்.

Stokes

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணி : ஜோ ரூட் (கே), ஜோப்ரா ஆர்ச்சர், மோயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் பெஸ், ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜோஸ் பட்லர், ஜாக் கிராவ்லி, பென் போக்ஸ், டான் லாரன்ஸ், ஜாக் லீச், டாம் சிப்லி, பென் ஸ்டோக்ஸ், ஆலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ்.

Advertisement