இந்திய அணிக்கு யார் வேணா கேப்டன் ஆகலாம் .! ஆனா தோனி மாதிரி தலைவன் ஆக முடியாது.! இந்திய வீரர் புகழாரம்

dhonii
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தோனியின் கேப்டன்சி குறித்து பேசியுள்ளார். இந்திய அணிக்காக 1999ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார் அதன் பின்னர் 2001ஆம் ஆண்டு இந்திய ஒருநாள் அணிக்கு தேர்வானார்.அடிக்கடி காயங்களால் அவதிப்படும் இவர் 2017ஆம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

nehra 3

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி குறித்து அவர் கூறியதாவது தோனி அறிமுகம் ஆனபோது அணியில் நான் நிரந்தரமான இடத்தில் இல்லை காயத்தால் அவதிப்பட்டு கொண்டு இருந்தேன் எனவே அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு அப்போது கிடைக்கவில்லை அதன் பிறகு இந்திய அணியில் இடம் பிடித்ததும் தோனியுடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது அவர் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர் அவருடைய குணங்கள் அனைத்தும் எனக்கு பிடிக்கும்.

- Advertisement -

கேப்டனாக அவரின் செயல்பாடு எனக்கு மிகவும் ஆச்சரியத்தை அளித்தது கேப்டனாக அவர் அணுகும் விஷயங்கள் புதியதாக இருக்கும் தோனிக்கு பிறகு நிறைய கேப்டன்கள் வரலாம் அனால் தோனியை போன்று நல்ல தலைமை பண்புடன் இருக்க வாய்ப்பில்லை என்று நெஹ்ரா பேட்டியில் தெரிவித்தார். தோனி கடந்த வருடம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

nehra 2

இந்திய அணியின் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் தோனி இதற்கு முன் தலைமை தங்கியுள்ளார்.அவரின் தலைமையின் கீழ் இந்திய அணி 50ஓவர் உலகக்கோப்பை மற்றும் 20ஓவர் உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ்ட்ராபி போன்ற முக்கிய தொடர்களை கைப்பற்றியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்ற தோனி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

Advertisement