என்னது அனுஷ்கா சர்மா கர்ப்பமாக இருக்காங்களா ? – அனுஷ்காவின் பதில் இதோ

anushka
- Advertisement -

இந்தி திரை உலகின் முன்னணி கதாநாயகி ஆன அனுஷ்கா சர்மா, இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை 2017 ஆம் ஆண்டு இத்தாலியில் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டார். அவர்கள் இருவரும் காதலில் இருந்து பின்னர் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

viratanushka

- Advertisement -

தற்போது இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் நிறைவு பெறப்போகிறது. இந்நிலையில் பிலிம்பேர் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட அனுஷ்கா சர்மா பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது : நீங்கள் கல்யாணம் செய்து கொண்டால் உங்களை திருமண வாழ்க்கை குறித்தும், கர்ப்பம் குறித்தும் கேள்விகளை மக்கள் எழுப்புவார்கள். ஏனெனில் அவற்றை படிக்க அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

அதுவும் ஒரு நடிகையாக இருந்தால் திருமணமாகி அடுத்த கேள்வி அவருடைய குழந்தையை பற்றி தான் அதில் நான் என்ன விதிவிலக்கா என்ன ? ஆனால் இதுபோன்று கேள்வி தற்போது வாடிக்கையாகிவிட்டது. நான் கர்ப்பமாக இருப்பதாக சில வதந்திகள் வெளியாகின. இதற்கு எல்லாம் என்னுடைய பதில் ஒன்றே ஒன்றுதான்.

Anushka

இந்த விடயத்தில் உங்களால் எதுவும் செய்ய முடியாது. இதை தவிர்த்து விட்டு வேறு ஏதாவது பேசுங்கள் என்று மட்டுமே கூறுவேன். நான் என்னுடைய 29 வயதில் திருமணம் செய்து கொண்டேன் எங்களுக்கு இன்னும் ஆண்டுகள் இருக்கிறது மேலும் நான் காதலித்து திருமணம் செய்து கொண்டேன் எனவே குழந்தை பெறுவது குறித்து திட்டம் வைத்துள்ளோம். நேரம் வரும்போது குழந்தை பெற்றுக்கொள்வேன். மேலும் கர்ப்பமாக இருந்தால் நிச்சயம் அதை ஓபனாக அறிவிப்பேன் என்று கர்ப்பம் குறித்து அனுஷ்கா கூறினார்.

Advertisement