நீங்க கிரிக்கெட் ஆடறீங்க. உங்க மனைவி கிழிஞ்ச டவுசரோட சுத்துறாங்க. அனுஷ்க்காவை – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

anushka

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா இந்திய அணி எந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடினாலும் அந்த நாட்டிற்கு சென்று மைதானத்தில் வீரர்களை உற்சாகப் படுத்துவது வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர ஜோடியான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் இந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் அங்கு உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு சென்று அங்கு புகைப்படம் எடுத்து அதனை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடும் வழக்கத்தினையும் வைத்துள்ளனர்.

அதுபோன்று அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடித்து இந்திய அணி நாடு திரும்பியுள்ளது. இந்நிலையில் அனுஷ்காவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அனுஷ்கா அரை டிரவுசருடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய ரசிகர்கள் நீங்கள் மைதானத்தில் கிரிக்கெட் ஆடுகிறீர்கள், உங்களது மனைவி அரை டிரவுசருடன் சுற்றுகிறார் என்று கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மா இது போன்ற புகைப்படங்களை பதிவிடுவது புதிதல்ல அவர் இதைப் போன்ற ஏகப்பட்ட புகைப்படங்களை பதிவிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது