பிறந்தநாளான இன்று கோலி அனுஷ்கா வெளியிட்ட புகைப்படம் – எந்த நாட்டில் எங்கு இருக்கிறார் பாருங்கள்

anushka

இந்திய அணியின் மூன்று வகையான கிரிக்கெட்டுக்கும் தற்போது கேப்டனாக செயல்பட்டு வருபவர் விராட் கோலி. கோலியின் சாதனைகளை நாம் புதிதாக தெரிந்துகொள்ள வேண்டியது கிடையாது. சச்சின் படைத்த அனைத்து சாதனைகளையும் ஒவ்வொன்றாக உடைத்து நாளுக்கு நாள் புதிய சாதனைகளை படைத்து வருகிறார்.

இந்நிலையில் விராட் கோலி தனது 31வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதனால் அவருக்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது பங்களாதேஷ் தொடரில் இருந்து விலகி ஓய்வில் இருக்கும் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பூடான் நாட்டில் தனது ஓய்வினை கழித்து வருகிறார்.

பூடான் நாட்டின் ஒரு மலைப்பகுதிக்கு டிரெக்கிங் சென்ற அவர்கள் மலையின் மீது அங்குள்ள ஒருவரின் இருப்பிடத்தில் தேநீர் அருந்தி அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை அனுஷ்கா சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருவதுடன் அவர்கள் இருவரும் பிறந்தநாளை பூடானில் கழித்து வருவது உறுதியாகியுள்ளது.