எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை வந்த சாரி கேட்கும் முதல் ஆள் யார் தெரியுமா ? – அனுஷ்கா பகிர்ந்த தகவல்

Anushka

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையான அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017ஆம் ஆண்டு இத்தாலியில் காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமண வாழ்க்கையில் இணைந்ததிலிருந்து காதல் பறவைகளாக சுற்றிவரும் இவர்கள் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று தங்களது திருமண வாழ்வை உற்சாகமாக அனுபவித்து வந்தனர்.

anushka

தற்போது கொரோனா வைரஸால் ஏற்பட்ட பொதுமுடக்கம் காரணமாக வீட்டிலேயே முடங்கி உள்ளனர் இந்த காதல் ஜோடிகள். இந்நிலையில் தற்போது வீட்டில் இருக்கும் இந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டியாக நடத்தி அதில் இருவரும் தங்கள் சொந்த விஷயங்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

இந்த வீடியோவில் “டேக் தி பிரேக்” என்ற தலைப்பில் இன்ஸ்டாகிராம் அதனை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் எங்கள் இருவருக்கும் சண்டை வந்தால் நான்தான் முதலில் விராட் கோலியிடம் சென்று சாரி கேட்பேன் என்று அனுஷ்கா சர்மா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் மேலும் 6 நிமிடம் 32 நொடிகள் ஓடும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Anushka-1

காதல் ஜோடிகளாக இருந்த இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்தும் சந்தோஷமாகவே உலகம் சுற்றி வருகின்றனர். அவ்வப்போது அவர்கள் இருவரும் எடுக்கும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

- Advertisement -