நிறைமாத கர்ப்பிணியான அனுஷ்கா சர்மாவின் போட்டோ ஷூட்

anushka
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மா பல ஆண்டுகளாக காதலித்து கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி இத்தாலியில் தங்களது நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு இந்திய அணி எங்கு பயணித்தாலும் அங்கு கோலி உடன் பயணிக்கும் அனுஷ்கா சர்மா எப்பொழுதும் காதல் ஜோடிகள் ஆகவே உலகம் சுற்றி வந்தனர். மேலும் அவ்வப்போது அவர்கள் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு மத்தியில் தனது மனைவி கர்ப்பமாக இருப்பதையும் தங்களுக்கு குழந்தை பிறக்கப் போவதும் விராத் கோலி சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்தார். மேலும் டிசம்பர் மாத இறுதியில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் குழந்தை பிறக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதனால் அவருக்கு வாழ்த்துக்களையும் அவர்களது குழந்தை குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்தது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் பங்கேற்ற கோலி டெஸ்ட் தொடரின் முதல் போட்டியோடு அந்த தொடரில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு தனது மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்பினார். இன்னும் ஒரு சில நாட்களில் குழந்தை பிறக்க இருக்கும் நிலையில் தற்போது அனுஷ்கா சர்மா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முழு நிறை மாத கர்ப்பிணியாக இருக்கும்போது ஒரு தனியார் நிறுவனத்திற்காக எடுத்துக் கொண்ட சில போட்டோசூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அனுஷ்கா சர்மா சற்று குறைச்சலான ஆடையுடன் முழுநீள கோட் அணிந்து தனது வயிறு முழுவதும் தெரியும்படி புகைப்படங்களை எடுத்து பகிர்ந்துள்ளார். அவரது இந்த புகைப்படங்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement