நான் இதனை செய்தால் விராட் கோலிக்கு மிகவும் பிடிக்கும் – அனுஷ்கா சர்மா ஓபன் டாக்

Anushka-1

பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா மற்றும் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலியும் காதல் செய்து இரண்டு வருடங்களுக்கு முன்பு இத்தாலியில் தங்களது திருமணத்தை எளிமையாக நடத்தி கொண்டனர். கடந்த இரண்டு வருடங்களாக அவர்கள் காதல் ஜோடி ஆகவே உலகம் முழுவதும் சுற்றி வருவதை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் அனுஷ்கா தற்போது விராத் கோலியுடன் பூடான் நாட்டில் அவரது பிறந்த நாளையும் மற்றும் ஓய்வையும் கொண்டாடி வருகிறார். இந்நிலையில் வோக் நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் விராட் கோலி குறித்து கூறியதாவது : நான் உண்மையில் அவரது அலமாரியில் இருந்து பலவற்றை பயன்படுத்துகிறேன். பெரும்பாலும் விராட் கோலியின் டீசர்ட் போன்ற துணிகளை நான் திருடுவேன். சில நேரம் அவருடைய ஜாக்கெட்டையும் எடுத்து அணிந்து கொள்வேன் நான் அவரது உடைகளை அணிந்தும் அணியும்போது விராட் கோலி அதனை கண்டு மகிழ்வார்.

மேலும் நான் இவ்வாறு செய்வது அவருக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அனுஷ்கா கூறியுள்ளார். இவர்கள் இருவரும் பொதுவாக ஒரே மாதிரி உடை அணிந்து வெளியே சொல்வது, வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்வது மற்றும் தனிமையான இடங்களுக்கு செல்வது என தங்களது நிகழ்வுகளை அவ்வப்போது சமூகவலைதளத்தில் பகிர்வார்கள். அவ்வாறு பகிரப்படும் அனைத்து புகைப்படங்களும் இணையதளத்தில் ஹிட் அடிக்க தவறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.