பொது நிகழ்ச்சியில் விராட் கோலிக்கு முத்தம் கொடுத்த அனுஷ்கா – வைரலாகும் வீடியோ

anushka

விராட் கோலி கிரிக்கெட் உலகில் படைத்த பல்வேறு சாதனைகளுக்கு கௌரவமாக அவருக்கு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் ஒரு பகுதிக்கு விராட்கோலி ஸ்டாண்ட் என்று பெயர் வைத்தனர். மேலும் மறைந்த அருண் ஜெட்லியின் ஞாபகமாக அவரது பெயரை பெரோஸ் ஷா கோட்லா மைதானத்திற்கு வைக்கும் நிகழ்ச்சியும் சமீபத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அவருடைய மனைவி அனுஷ்கா சர்மா மற்றும் இந்திய அணி வீரர்கள் சிலரும் கலந்துகொண்டனர். அந்த நிகழ்ச்சியில் விராட் கோலி தந்தை இறந்த அன்றும் கிரிக்கெட் விளையாடியவர் என்று பேசிக் கொண்டிருக்கும்போது கோலி உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார். அப்பொழுது அவரது மனைவி அனுஷ்கா சர்மா கோலியின் கையினை பிடித்து அவர் கைக்கு முத்தமிட்டார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த வீடியோவை கோலியின் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். கடந்த பத்தாண்டுகளில் 20 ஆயிரம் ரன்கள் குவித்து விராட் கோலி சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பல எண்ணற்ற சாதனைகளை செய்த கோலியை கவுரவிக்க இந்த நிகழ்ச்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.