ஜடேஜா மற்றும் புஜாராவுக்கு நோட்டீஸ் அனுப்பிய ஊக்கமருந்து தடுப்பு ஆணையம் – சிக்கல் ஏற்பட வாய்ப்பு

Jadeja
- Advertisement -

இந்திய தேசிய ஊக்கமருந்து ஆணையம் இந்திய விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து மற்றும் நியூட்ரிசன் தொடர்பாக விவரங்களை அவ்வப்போது கேட்டு வருவது வழக்கம். மேலும், இந்த ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்தில் 110 கிரிக்கெட் வீரர்கள் இதற்காக பதிவு செய்துள்ளனர். இந்த ஆணையத்தின் விதிகளின்படி அனைத்து விளையாட்டு வீரர்களும் ஊக்க மருந்து தடுப்பு விசாரணை மற்றும் அது தொடர்பான பரிசோதனைகளுக்கு எப்போதும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

Jadeja

- Advertisement -

அதேபோல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வீரர்கள் தாங்கள் எங்கு இருக்கிறோம் என்ற விவரத்தை அந்த ஆணையத்தின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வீரர்களின் சார்பாக பிசிசிஐ இதனை கடந்த பல ஆண்டுகளாக செய்து வருகிறது. மூன்று மாதத்திற்கு ஒருமுறை பதிவு செய்த 110 கிரிக்கெட் வீரர்களின் இருப்பிட விவரத்தை அந்த இணையத்தில் பிசிசிஐ பதிவு செய்து விடும்.

ஆனால் சமீபத்தில் சேட்டேஷ்வர் புஜாரா, ரவிந்திர ஜடேஜா, கேஎல் ராகுல் ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா ஆகியோர் விவரங்களை பிசிசிஐஅந்த ஆணையத்தில் பதிவு செய்யவில்லை போலிருக்கிறது.
இந்நிலையில் இந்த ஐந்து வீரர்களுக்கும் தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது மேலும் அந்த வீரர்களின் சார்பாக பிசிசிஐ இதற்கு பதில் அளித்து விட்டது.

Pujara-2

அந்த பதிலில் ‘பாஸ்வேர்ட் சிக்கல்’ காரணமாக தங்களால் குறிப்பிட்ட நேரத்தில் அந்த விவரங்களை நிரப்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.மேலும் இந்த சிக்கலை தீர்த்து விடலாம் என்றும் ஊக்கமருந்து ஆணையத்திடம் பிசிசிஐ விளக்கம் கொடுத்து கேட்டுள்ளது. இந்த விளக்கம் அப்படியே ஏற்றுக் கொள்ளப் படுமா,. அல்லது வீரர்களின் மீது குறைந்தபட்ச நடவடிக்கை எடுக்கப்படுமா என்று இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

Rahul

கொரோனா நேரத்தில் மீண்டும் எப்போது போட்டிகள் துவங்கும் என்று தெரியாத நிலையில் இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தாண்டு ஐ.பி.எல் தொடரை ரசிகர்கள் இல்லாமல் நடத்த பி.சி.சி.ஐ யோசித்து வரும் நிலையில் ராகுல் மற்றும் ஜடேஜாவுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

Advertisement