இந்திய அணிக்காக விளையாட உள்ள ஹாங்காங் கேப்டன் எப்படின்னு பாக்குறீங்களா ? – விவரம் இதோ

Anshuman

ஹாங்காங் அணியின் முன்னாள் கேப்டனான அனுஷ்மான் ராத் ஹாங்காங் அணிக்காக 2014 ஆம் ஆண்டு அறிமுகமாகி இதுவரை 16 ஒருநாள் மற்றும் 20 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். இவர் ஒரு இடதுகை ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Anshuman 1

இந்நிலையில் அவர் இந்திய அணியில் இடம் பிடிக்கும் நோக்கில் தற்போது நாக்பூரில் குடியேறி வசித்து வருகிறார். இந்திய வம்சாவளியை சேர்ந்த இவரின் பெற்றோர்களின் வேலை காரணமாக ஹாங்காங் குடிபெயர்ந்தனர். அதன் பிறகு அனுஷ்மான் ராத் ஹாங்காங் நாட்டில் பிறந்ததால் அந்நாட்டு கிரிக்கெட் அணியில் விளையாடினார்.

தற்போது இவர் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் ஆசையினால் மீண்டும் இந்தியா திரும்பி வசித்து வருகிறார். மேலும் தற்போது விதர்பா அணிக்காக ரஞ்சி போட்டியில் விளையாட விண்ணப்பித்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் அதற்கு முறைப்படி அனுமதி கேட்டு கடிதமும் கொடுத்துள்ளார்.

Rath

அடுத்த சீசனில் விதர்பா அணிக்காக விளையாடுவதற்காக தயாராகி வருகிறார். இந்நிலையில் தற்போது இந்திய ஏ டிவிஷன் போட்டிகளில் இவர் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை இவர் ரஞ்சி கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடி தனது திறமையை நிரூபித்தால் அவர் இந்திய அணியில் விளையாட சாத்தியம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -