எனக்கு சுத்தமா மனசு ஏத்துக்கல.. தனது முதல் விக்கெட் குறித்து பேசிய அறிமுகம் வீரர் – அன்ஷுல் கம்போஜ்

Anshul Kamboj
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த ஜூலை 23-ஆம் தேதி மான்செஸ்டர் நகரில் துவங்கிய நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய கிரிக்கெட் அணியில் கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக இணைந்திருந்த அன்ஷுல் கம்போஜ்ஜிக்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த போட்டியில் அறிமுகமான அவர் முதல் இன்னிங்ஸ்சின் போது பேட்டிங் செய்கையில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தாலும் முதல் இன்னிங்ஸ்சில் விக்கெட்டை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

எனது பந்துவீச்சு திருப்தியாக இல்லை : அன்ஷுல் கம்போஜ்

அதிலும் குறிப்பாக இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க ஆட்டக்காரரான பென் டக்கெட் 100 பந்துகளில் 13 பவுண்டரிகளுடன் 94 ரன்கள் எடுத்திருந்த வேளையில் அவரை சதத்தை அடிக்க விடாமல் சிறப்பாக பந்துவீசிய ஆட்டமிழக்க வைத்து சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்திருந்தார் .

- Advertisement -

இந்நிலையில் தான் இந்த போட்டியில் முதல் விக்கெட்டை வீழ்த்தியிருந்தாலும் அது தனக்கு திருப்தி அளிக்கவில்லை என்று இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் அன்ஷுல் கம்போஜ் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறியதாவது :

நான் இந்த போட்டியில் அறிமுகமானதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். அதேபோன்று போட்டியின் ஆரம்பத்தில் நல்ல இடங்களில் பந்துவீச வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய பந்துவீச்சில் எனக்கு திருப்தி இல்லை. ஏனெனில் நான் இன்னும் சிறப்பாக பந்துவீச வேண்டும். போட்டியின் முதல் இரண்டு ஸ்பெல்களில் நான் கொஞ்சம் அதிகமாக முயற்சித்தேன்.

- Advertisement -

ஆனால் மூன்றாவது ஸ்பெல்லில் தான் என்னுடைய பலம் என்னவோ அதில் கவனத்தை செலுத்தி பந்து வீசினேன். அப்போதுதான் எனக்கு முதல் விக்கெட் கிடைத்தது. போட்டியின் மூன்றாம் நாளான இன்று இன்னும் சிறப்பாக பந்து வீசுவோம் என்று நினைக்கிறேன். பவுண்டரிகளை அதிகமாக கொடுக்காமல் பந்து வீசினால் இந்த மைதானத்தில் விக்கெட் விழும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : ரிஷப் பண்ட் போராட்ட ரன்ஸை இப்படி வீணடிக்கலாமா? மோசமான கில், இந்திய பவுலர்களை விமர்சித்த நாசர் ஹுசைன்

இன்னும் இந்திய அணியில் இருந்து நான் நிறைய கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக அனுபவ வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ராவிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறையவே இருக்கிறது. எனவே அவருடன் தொடர்ந்து பேசி வருகிறேன் என அன்ஷுல் கம்போஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement