முகமது ஷமி வெளியே.. சி.எஸ்.கே வீரர் உள்ளே.. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஏற்படவுள்ள மாற்றம் – பி.சி.சி.ஐ முடிவு

Shami
- Advertisement -

இந்திய அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட மிகப்பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்து விட்டதால் அவர்களுக்கு பதிலாக எந்தெந்த வீரர்களுக்கு இடம் கிடைக்கும்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய அணியில் ஏற்படவுள்ள மாற்றம் :

அதோடு இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் யார்? என்ற எதிர்பார்ப்போம் அதிகளவில் நிலவி வருகிறது. இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி நாளை மே 24-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் ஏகப்பட்ட மாற்றங்களை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

- Advertisement -

அந்த வகையில் எதிர்வரும் இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் கேப்டனாகவும் அவரது தலைமையில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி காயத்திலிருந்து மீண்டு வந்தாலும் பழைய ரிதத்தை பிடிக்க முடியவில்லை என்பதால் அவர் டெஸ்ட் அணியில் இருந்து கழட்டிவிட்டு புதிய வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.

அந்த வகையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் வேகப்பந்து வீச்சாளரான அன்ஷுல் கம்போஜ்க்கு வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே ரஞ்சி தொடரில் ஒரே போட்டியில் 10 விக்கெட்டை வீழ்த்தியுள்ளதால் அவரால் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக பந்துவீச முடியும் என்ற நம்பிக்கை நிர்வாகத்திடம் இருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கும் வேளையில் தற்போது கூடுதல் வேகப்பந்து வீச்சாளராக அன்சுல் கம்போஜ்க்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : இதெல்லாம் விளையாட்டுல சகஜம் தான்.. குஜராத் அணியை வீழ்த்திய பிறகு – ரிஷப் பண்ட் பேட்டி

இந்திய அணி இங்கிலாந்து செல்வதற்கு முன்னதாக இந்திய ஏ அணி இங்கிலாந்துக்கு பயணிக்கவுள்ள வேளையில் அந்த அணியிலும் அன்ஷுல் கம்போஜ் இடம் பெற்றுள்ளார். ஒருவேளை இங்கிலாந்து லயன்ஸ் போட்டியில் அவர் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் நிச்சயம் இந்திய டெஸ்ட் அணியிலும் அவர் இடம்பெற்று விளையாட வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement