- Advertisement -
இந்திய கிரிக்கெட்

31 வயதிலேயே ரிட்டயர்மென்ட்டை அறிவித்த இந்திய வீரர்.. அடுத்த திட்டம் இதுதானாம் – விவரம் இதோ

சமீபகாலமாகவே இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு கிடைக்காமல் பல்வேறு வீரர்கள் இளம் வயதிலேயே ஓய்வை அறிவித்து வருவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் தற்போது உத்திர பிரதேச மாநில அணிக்காக ரஞ்சி அணியில் விளையாடி வந்த வேகப்பந்து வீச்சாளரான அன்கிட் ராஜ்பூட் தனது 31 வது வயதிலேயே இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

31 வயதில் ஓய்வை அறிவித்த இந்திய வீரர் :

உத்தர பிரதேச அணிக்காக கடந்த 2012-13-ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி தொடரில் அறிமுகமான அவர் இதுவரை அந்த அணிக்காக 248 விக்கெடுகளை வீழ்த்தியுள்ளார். இருந்தபோதிலும் அவருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

- Advertisement -

ஆனாலும் கடந்த 2013-ஆம் ஆண்டு இவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. பின்னர் சென்னை அணியில் இருந்து வெளியேறிய அவர் ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளில் இடம்பிடித்து விளையாடியிருந்தார்.

கடைசியாக ஐ.பி.எல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்காக ஒப்பந்தமாயிருந்த அவர் அந்த அணிக்காக ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அதுமட்டும் இன்றி அண்மையில் நடைபெற்று முடிந்த 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் கலந்து கொண்ட அவரை எந்த ஒரு அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

- Advertisement -

ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுவரை 29 போட்டியில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர் அவர் சமீபத்தில் நடைபெற்று முடிந்த ரஞ்சி டிராபி தொடரில் உத்தரபிரதேச அணிக்காக விளையாடியிருந்தார். ஆனால் அந்த தொடரிலும் அவரால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.

இதையும் படிங்க : 3 ஆவது டெஸ்ட் டிராவானால் இந்தியாவின் நிலை என்ன? பைனலுக்கு போகுமா? – விவரம் இதோ

இந்நிலையில் தற்போது இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ள அவர் எதிர்காலத்தில் உலக கிரிக்கெட்டில் விளையாடும் மற்ற வாய்ப்புகளை தேடிச் செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -