வெறும் 13 பந்துகளில் 6 விக்கெட்: நேபாள வீராங்கனை அசத்தல் சாதனை

Nepal team

சர்வதேச போட்டிகள் தவிர டிவிஷனல் போட்டிகள் நடத்தி கத்து குட்டி அணிகளுக்கு ஐசிசி வருடம் முழுவதும் கிரிக்கெட் தொடர் நடத்துவது வழக்கம். குறிப்பாக ஆசிய கண்டத்தில் கிரிக்கெட் நன்றாக வளர்ந்து வருவதை வைத்து, ஐசிசி தற்போது தெற்காசியாவில் தனது கவனத்தைத் திருப்பியுள்ளது.

ICC

 இப்படியாக நமது அண்டை நாடான நேபாளம் மற்றும் மாலத்தீவு அணிகளுக்கிடையேயான மகளிர் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்றது. இந்த போட்டி 20 ஓவர் போட்டியாக நடத்தப்பட்டது .

- Advertisement -

இரண்டு அணிகளுமே கத்துக்குட்டி அணிகள் என்பதால் இந்த ஆட்டத்திற்கு பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.  ஆனால் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் நேபாள வீராங்கனை அஞ்சலி சந்த் ஒரு அற்புதமான ஆட்டத்தை ஆடி உள்ளார்.

Anjalai

 இந்த போட்டியில் முதலில் ஆடிய மாலத்தீவுகள் பெண்கள் அணி பெரும்பாலானவர்கள் வெறும்  16 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது.

- Advertisement -

இந்த போட்டியில் மிக அற்புதமாக பந்துவீசிய அஞ்சலி சந்த்  2.1 ஓவர்கள் மட்டுமே வீசி 6 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இவர் ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்கவில்லை என்பதே

Anjalai

இதுவரை கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஒரு வீரர், வீராங்கனை கூட ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்காமல் 5 விக்கெட்டுக்கு மேலாக வீழ்த்தியதில்லை. இதன் காரணமாக 146 வருட கிரிக்கெட் வரலாற்றில் ஒரு பெரும் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி பதிவு செய்துள்ளது.

Advertisement