ரஜினி ஸ்டைலில் மரண மாஸாக தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்த அனிருத் – வைரலாகும் வீடியோ

Anirudh

இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி வீரருரான தோனி இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது இந்த பிறந்தநாளை ரசிகர்கள் #HappyBirthdayDhoni என்ற சிறப்பு ஹாஷ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், இந்நாள் வீரர்கள் என பலதரப்பட்ட திசைகளிலிருந்தும் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Dhoni-4

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் அனிருத் தோனிக்கான தனது பிறந்த நாள் வாழ்த்தை தனது மியூசிக் மூலமாகவே வெளிப்படுத்தியுள்ளார். அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிமுகம் தியேட்டரில் எவ்வாறு ஒவ்வொரு எழுத்தாக வருமோ அதே போன்று தோனியின் பெயரை கேப்டன் கூல் என்று வர வைத்து அதன் பின்னர் ரஜினிக்கு பயன்படுத்தும் அதே பின்னணி இசையை பயன்படுத்தி இந்த பாடலை வடிவமைத்துள்ளார்.

மேலும் இந்த பின்னணி இசையில் அவருடைய மரணம் மாசு மரணம் என்ற பாடல் வரியையும் இணைத்து அதனை பகிர்ந்த அனிருத் “இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அன்பிற்குரிய நம்பர் 7 ஹாப்பி பர்த்டே” என்று குறிப்பிட்டுள்ளார். தோனி பிறந்தநாளை முன்னிட்டு ஒவ்வொருவரும் தங்களது தனிப்பட்ட வகையில் வித்தியாசமாக அவருக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

 

View this post on Instagram

 

Happy birthday dearest #7 🥳🥳🥳You are an emotion 😊😊😊 #HappyBirthdayDhoni

A post shared by Anirudh (@anirudhofficial) on

தற்போது அனிருத் அவருக்கே உரித்தான பாணியில் இசையின் மூலம் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறி உள்ளது சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இவர் பகிர்ந்து இந்த வீடியோவும் அதிக அளவு ரசிகர்களால் பகிரப்படும் வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -