தான் பயிற்சியாளர் பதிவியில் இருந்து ராஜினாமா செய்து விலக இதுவே காரணம் – மனம்திறந்த கும்ப்ளே

Kumble

இந்திய அணியில் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக பதவி ஏற்பதற்கு முன்னர் ஓராண்டு பயிற்சியாளராக இருந்தவர் அணில் கும்ப்ளே. இந்திய அணியின் முன்னாள் வீரரான இவர் ஓய்வு பெற்ற பிறகு கிரிக்கெட் தொடர்பான வேலைகளை செய்து வந்து இறுதியில் இந்திய கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராக மாறினார். ஆனால் அவர் பயிற்சி அளித்த ஓராண்டிற்குள் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் இவருக்கும் இடையே ஏகப்பட்ட பிரச்சினைகள் இருந்து அவர் தனது ராஜினாமா செய்தார்.

Kumble 3

ஆனால் அது என்ன விவகாரம் என்று இன்றுவரை வெளியில் சொல்லப்படாமல் ரகசியமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும் இவர்களின் இடையே முற்றிய மோதலால் கும்ப்ளே தானாக முன்வந்து பயிற்சியாளர் பதவியை துறந்தார். அவருக்கு பதிலாக தான் தற்போது ரவி சாஸ்திரி இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

கும்ப்ளே பயிற்சியாளராக இருந்தபோது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஒரு போட்டியில் கோலி காயத்துடன் ஆடுவேன் என்று அடம் பிடித்ததாக அப்போது செய்திகள் எழுந்தன. ஆனால் அதனை விரும்பாத கும்ப்ளே காயத்துடன் விளையாட வேண்டாம் என்று கோலியை கேட்டுக்கொண்டு ரஹானேவை கேப்டனாக அந்த போட்டியின்போது கேட்டுக்கொண்டதாக அப்போதைய செய்தி இருந்தது.

Kumble 2

ஆனாலும் தனது கேப்டன் பதவியை இழக்க விரும்பாத கோலி காயத்துடன் அந்த போட்டியில் விளையாடியதாகவும் இதனால் பெரிய கருத்து வேறுபாடு இவர்களுக்கு இடையே ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த கருத்து வேறுபாடு முற்றிய நிலையில் அப்போதைய கிரிக்கெட் கமிட்டிக்கு தினம்தோறும் கும்ப்ளேவைப் பற்றி தினமும் புகார் எழுப்பிய வண்ணம் இருந்தார் கோலி இதனையடுத்து தனது பெருந்தன்மையால் பயிற்சியாளர் பதவியை கும்ப்ளே ராஜினாமா செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியது.

- Advertisement -

இந்நிலையில் இது தொடர்பாக தற்போது இன்ஸ்டாகிராம் லைவில் பேசிய கும்ப்ளே கூறுகையில் : இந்திய அணிக்கு பயிற்சியாளராக பொறுப்பு ஏற்றதில் எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால் அதனை நான் இழந்தது சற்று வருத்தமாக இருந்தது. இந்திய அணியுடன் நான் செலவிட்ட அந்த ஓராண்டு மிக அருமையான நாட்களாகும். நன்றாக விளையாடும் வீரர்களுடன் ஓய்வு அறையை பகிர்ந்து கொள்வது நல்ல சூழலை ஏற்படுத்தியது.

Kumble 1

அந்த ஒரு வருடம் முழுவதும் நாங்கள் சிறப்பாக செயல்பட்டோம். இந்திய அணியில் என்னுடைய பங்களிப்பு எனக்கு மகிழ்ச்சியையே தருகிறது. எனினும் எனது ராஜினாமா முடிவு கொஞ்சம் நன்றாக அமைந்திருக்கலாம் என்று எனக்குத் தோன்றியது. இருப்பினும் அந்த ஓராண்டு தான் அளித்த பங்களிப்பு எனக்கு உண்மையில் மகிழ்ச்சியே என்றார் கும்ப்ளே. மேலும் ஓய்வு பெறும்போது விராத் கோலியுடன் இனி உறவு சாத்தியமில்லை என்றும் கூறியிருந்தார். இருப்பினும் இவர்களுக்கு இடையே என்ன நடந்தது என்று இதுவரை ஒருவரும் வாய் திறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.