இந்த ரூல்ஸ் மட்டும் அப்ப இருந்திருந்தா எப்பவோ 10 விக்கெட்டுகளை வீழ்த்தியிருப்பேன் – அணில் கும்ப்ளே ஓபன் டாக்

Kumble
- Advertisement -

இந்திய அணியின் மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளராக இருந்தவர் அணில் கும்ப்ளே. இந்திய அணிக்காக 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதிகபட்சமாக 1999 ஆம் ஆண்டு டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரே ஆட்டத்தில் 10 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

Kumble

- Advertisement -

கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு பேர் மட்டுமே சர்வதேச அளவில் இந்த சாதனையை செய்துள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த ஜிம் லேக்கருக்கு பிறகு இந்தியாவின் அணில் கும்பிலே தான் இந்த சாதனையை செய்துள்ளார். மேலும் அந்த காலகட்டத்தில் தற்போது கடைபிடிக்கப்படும் டிஆர்எஸ் முறை இருந்ததில்லை.

நடுவர் முடிவில் சந்தேகங்கள் இருந்தால் மூன்றாம் நடுவரிடம் முறையிட்டு முடிவை செய்து சரி செய்து கொள்ளலாம். அந்த காலகட்டத்தில் இந்த வசதி இருந்திருந்தால் இன்னும் எளிதாக முன்னரே 10 விக்கெட் வீழ்த்தி இருப்பேன் என்று கூறியுள்ளார் அணில் கும்பிலே
.
kumble 1

அவர் கூறுகையில் ..

நான் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் தேனீர் இடைவேளை வரை 6 விக்கெட் வீழ்த்தி இருந்தேன். மீண்டும் களம் இறங்கிய போது சோர்வாக இருந்தேன் ஏனெனில் தேனீர் இடைவேளை வரை தொடர்ந்து பந்து வீசிக்கொண்டிருந்தேன்.

kumble

அந்த போட்டியின் போது 10 விக்கெட் வீழ்த்தி விடவேண்டும் என்று நான் நினைத்ததில்லை. ஆனால் தற்போது கடைபிடிக்கப்படும் டிஆர்எஸ் முறை இருந்திருந்தால் தேனீர் இடைவேளைக்கு முன்பே, அல்லது அதற்கும் முன்னதாகவே 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருப்பேன் என்று கூறியுள்ளார் அணில் கும்ப்ளே.

Advertisement