நான் எனது 15 வருட கிரிக்கெட்டில் பந்துவீச கஷ்டப்பட்ட பேட்ஸ்மேன் இவர்தான் – மனம்திறந்த அணில் கும்ப்ளே

Kumble
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சு ஜாம்பவானான அனில் கும்ப்ளே சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக சுமார் 15 ஆண்டுகாலம் விளையாடி உள்ளார். மேலும் இந்திய அணிக்கு சில ஆண்டுகள் கேப்டனாக செயல்பட்டுள்ளார். இதுவரை 132 போட்டிகளில் விளையாடி 619 விக்கெட்டுகளையும், 271 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 337 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

kumble 1

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 956 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. டெஸ்ட் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் முரளிதரன் மற்றும் வார்னேவை தொடர்ந்து மூன்றாமிடத்தில் இருக்கிறார். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் என இரண்டு விதத்திலுமே அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர்கள் இவர் தான்.

மிகச்சிறந்த சுழற்பந்து வீச்சாளரான இவர் விளையாடிய போது ஏகப்பட்ட பேட்டிங் ஜாம்பவான்கள் தங்களது கெரியரின் உச்சத்தில் இருந்தனர். குறிப்பாக பாண்டிங், சங்கக்காரா, ஜெயவர்த்தனே, இன்சமாம், கல்லிஸ், லாரா போன்ற சிறப்பான பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்துவீசி அவர்களது விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளார்.

kumble

டெஸ்ட் கிரிக்கெட்டில் பல ஆண்டுகள் இந்திய அணியின் தூணாக திகழ்ந்த இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் நடைபெற்ற ஒரு உரையாடலில் தான் பந்து வீசியதிலேயே கடினமான பேட்ஸ்மென் யார் என்பது குறித்த கருத்தினை பகிர்ந்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது : நான் எதிர்கொண்ட கடினமான பேட்ஸ்மேன் என்று பார்த்தால் நிறைய பேர் இருக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் கடினமான பேட்ஸ்மென் என்று குறிப்பிட வேண்டுமாயின் அது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான பிரைன் லாரா தான். ஏனெனில் ஒவ்வொரு பந்திற்கும் நான்கு விதமான ஷாட்டுகளை அவர் வைத்திருப்பார். அதனால் அவருக்கு எதிராக பந்து வீசுவது கடினம்.

Lara

அவரை எப்படியும் வீழ்த்திவிடலாம் என்று நினைப்போம் ஆனால் அவர் ஒவ்வொரு முறையும் வேறு வேறு ஷாட்களை ஆடிக் கொண்டு இருப்பார். எனவே அவருக்கு எதிராக பந்துவீசுவது தான் கடினம் என்று தெரிவித்துள்ளார். லாராவுக்கு எதிராக கும்ப்ளே 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 5 முறை அவரை வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement