இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. 2 போட்டிகளின் முடிவில் சமநிலையில் இருக்கும் அத்தொடரின் 3வது போட்டி ஜூலை 10ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்தின் துவக்க வீரர்கள் பென் டக்கெட், ஜாக் கிராவ்லி ஆகியோரை நித்திஷ் ரெட்டி ஒரே ஓவரில் அவுட்டாக்கினார்.
கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அறிமுகமான அவர் பேட்டிங்கில் சதத்தை அடித்து சிறப்பாக விளையாடிய அசத்தினார். இருப்பினும் பந்து வீச்சில் தொடர்ச்சியாக நிறைய ஓவர்கள் வீசாத அவர் பெரியளவில் விக்கெட்டுகளையும் எடுக்கவில்லை. அதனாலயே இத்தொடரின் முதல் போட்டியிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றே சொல்லலாம்.
முன்னேறிய நிதிஷ்:
இருப்பினும் இந்தப் போட்டியில் தொடர்ந்து நிறைய ஓவர்கள் வீசிய அவர் விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார். இந்நிலையில் நித்திஷ் ரெட்டி தொடர்ச்சியாக நிறைய ஓவர்கள் வீசுவது ஆச்சரியமளிப்பதாக ஜாம்பவான் அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். எனவே நல்ல பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் செய்யும் திறன் கொண்டுள்ள அவரை இந்திய அணி தொடர்ச்சியாக வாய்ப்பளித்து வளர வைக்க வேண்டுமென்று கும்ப்ளே கேட்டுக் கொண்டுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நித்திஷ் ரெட்டி பவுலிங் செய்த விதம் எனக்கு ஆச்சரியமளித்தது. அவர் தொடர்ச்சியாக சரியான இடங்களில் பந்தை போடுகிறார். ஜாக் கிராவ்லியை அவர் அவுட்டாக்கிய பந்து அழகானது. ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடிய அவர் பேட்டிங்கில் சதத்தை அடித்து பந்து வீச்சில் விக்கெட்டுகளை எடுக்காவிட்டாலும் ஓரளவு பங்காற்றினார்”
கும்ப்ளே பாராட்டு:
“அவரைப் போன்ற பவுலர் எதிரணி போடும் பார்ட்னர்ஷிப்பை உடைப்பது மற்ற பவுலர்கள் நன்றாக மூச்சு விட்டு கட்டுப்பாட்டுடன் பவுலிங் செய்ய உதவும். கிட்டத்தட்ட 14 ஓவர்கள் கொண்ட ஸ்பெல்லை வீசியது அவருடைய ஃபிட்னஸ் மற்றும் கட்டுப்பாட்டை காட்டுகிறது. மிகவும் இளம் பையனான அவர் ஏற்கனவே சதத்தை அடித்தவர், கூர்மையாக ஃபீல்டிங் செய்யக் கூடியவர்”
இதையும் படிங்க: 10.2 ஓவரில்.. 0.9 டிகிரியை காணோம்.. இந்தியாவின் போக்கை உடைத்த பந்து.. அம்பயரிடம் மல்லுக்கட்டிய கில்
“எனவே மாற்றங்களைத் தவிர்த்து அவரை இந்தியா தொடர்ச்சியாகப் பயன்படுத்த வேண்டும்” என்று கூறினார். அவர் கூறுவது போல நித்திஷ் ரெட்டி வெறும் 22 வயது மட்டுமே நிரம்பியுள்ளார். எனவே நாட்கள் செல்ல செல்ல அனுபவத்தால் முன்னேறி அவர் இன்னும் சிறப்பாக பவுலிங் செய்வார் என்று நம்பலாம். அதனால் வருங்காலங்களில் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை அவர் நிரப்புவதற்கு வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



