இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராத் கோலி டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்ததை தொடர்ந்து தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். அந்த வகையில் நடைபெற்ற முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கெதிரான தொடரின் முதல் போட்டியில் சதம் அடித்த அவர் பின்னர் நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் சொற்ப ரன்களில் ஒரே மாதிரி ஆட்டம் இழந்து ஏமாற்றத்தை அளித்திருந்தார்.
விராட் கோலி இதை செய்ஞ்சாலே பார்முக்கு வந்துடுவார் : அணில் கும்ப்ளே
இதன் காரணமாக தற்போது நடைபெற்று வரும் 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரானது அவருக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் அவர் சொதப்பும் பட்சத்தில் அவரது எதிர்காலம் கேள்விக்குறியாக்கும் என்கிற நிலையில் வங்கதேச இயக்கியதாக நடைபெற்ற முடிந்த முதல் ஆட்டத்தில் சுமாரான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவர் வெறும் 22 ரன்கள் மட்டுமே அடித்த நிலையில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்திருந்தார்.
ஆனால் மறுபுறம் சமீபகாலமாகவே தடுமாறி வந்த ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் கூட அவர் சதம் அடித்து தனது பார்மை நிரூபித்து இருந்தார். ஆனால் விராட் கோலி தொடர்ந்து பேட்டிங் ஃபார்ம் இன்றி தடுமாறி வருவது ரசிகர்கள் மத்தியிலும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் பயிற்சியாளருமான அணில் கும்ப்ளே ரோகித் சர்மா போன்று சுதந்திரமாக விளையாடினால் விராட் கோலியாலும் ரன் குவிக்க முடியும் என அவருக்கு அட்வைஸ் செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறியதாவது :
விராட் கோலி பெரிய ரன்கள் அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தனக்கு தானே அழுத்தத்தை போட்டுக் கொள்கிறார் என்று நினைக்கிறேன். ஆனால் அவர் அதுபோன்று விளையாடாமல் தனது இயல்பான விளையாட்டை வெளிப்படுத்தினாலே அவரால் அசத்த முடியும். ரோஹித் சர்மாவை பாருங்கள் ஒருநாள் போட்டியின் போது அவர் மிகவும் சுதந்திரமாக விளையாடினார்.
இதையும் படிங்க : 27/2 டூ 356/5.. 16 வருடம்.. இங்கிலாந்தை நொறுக்கிய ஆஸி.. ஐசிசி வரலாற்றில் காணாத இரட்டை உலக சாதனை
அந்த வகையில் அச்சமற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் அவராலும் சாதிக்க முடியும் என்று நினைப்பதாக அணில் கும்ப்ளே கூறியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முக்கிய லீக் போட்டியானது பிப்ரவரி 23-ஆம் தேதி துபாய் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



