இந்திய அணிக்கு எதிரான தொடரில் 18 மாத இடைவெளிக்கு பின்னர் அணியில் இணைந்த பிரபல வீரர் – விவரம் இதோ

Mathews

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அதனைத்தொடர்ந்து இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரிலும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான இலங்கை அணியும் அறிவிக்கப்பட்டது. இலங்கை அணிக்கு வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா கேப்டனாக செயல்பட உள்ளார். இந்த தொடருக்கான இலங்கை அணியில் காயத்தில் இருந்து திரும்பிய மேத்யூஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த 18 மாதங்களாக காயத்தால் அணியில் இடம்பெறாமல் இருந்த மேத்யூஸ் தற்போது முழுஉடற்தகுதி பெற்றுள்ளதால் அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். ஆல்ரவுண்டரான மேத்யூஸ் பல போட்டிகளில் இலங்கை அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். மேலும் இலங்கை அணியை வழிநடத்தும் உள்ளார்.

Mathews 1

எனவே அவரது வருகை அந்த இலங்கை அணிக்கு பலம் என்றே கூறலாம். இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி ஜனவரி 5ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -