இந்திய ஆஸ்திரேலிய தொடரில் இருந்து விலகிய முக்கிய வீரர். மாற்று வீரர் அறிவிப்பு – விவரம் இதோ

INDvsAUS

ஐபிஎல் தொடரை அடுத்து இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் என மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வீரர்கள் ஏற்கனவே ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றடைந்து தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

INDvsAUS

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் வரும் 27ஆம் தேதி சிட்னியில் துவங்குகிறது. இந்நிலையில் இந்த ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ரிச்சர்ட்சன் அதிரடியாக விலகியுள்ளார். மேலும் அவருக்கு பதிலாக “ஆண்ட்ரு டை” அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக தகவலை வெளியிட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து அவர்கள் வெளியிட்ட கருத்தில் : ரிச்சர்ட்ஸன்க்கு தற்போது குழந்தை பிறந்துள்ளதால் அவர் தன்னுடைய குழந்தையுடனும், மனைவியுடனும் நேரத்தை செலவிட விரும்பி ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்ததாகவும் எனவே அவரது இந்த கோரிக்கையை ஏற்று ஒட்டுமொத்த அணி நிர்வாகத்தின் அனுமதியுடன் அவருக்கு இந்த தொடரில் இருந்து விலக அனுமதி தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர்.

மேலும் நாங்கள் எப்போதும் வீரர்களின் குடும்பத்திற்கு உறுதுணையாக இருப்போம் என்றும் ரிச்சர்ட்ஸன் தற்போது அவரது குடும்பத்துடன் இருக்க அவகாசம் கேட்டதால் அவருக்கு அனுமதி வழங்கி உள்ளோம் மேலும் அவரை நிச்சயம் ஆஸ்திரேலிய அணி இழக்கின்றது என்றும் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

richardson 1

ஆனால் அவரின் இந்த கோரிக்கையை நாங்கள் மதித்து அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். எனவே அவருக்கான இந்த அனுமதியை வழங்கி உள்ளோம். மேலும் விரைவில் அவர் ஆஸ்திரேலிய அணிக்கு திரும்பி அசத்துவார் என்றும் அவர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.