எளிதாக ஜெயிக்க வேண்டிய போட்டியை இங்கிலாந்து அணி தோற்க இதுவே காரணம் – ஆண்ட்ரு ஸ்ட்ராஸ் ஓபன்டாக்

Strauss
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் எளிதாக வெற்றி பெறவேண்டிய போட்டியை மழை காரணமாக இந்திய அணி டிராவில் முடித்தது. அதன் பின்னர் தற்போது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று முடிந்த இரண்டாவது டெஸ்டில் 151 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபாரமாக வீழ்த்திய இந்திய அணியானது 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

indvseng

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 25-ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி பெற்ற தோல்வி குறித்து அந்த அணியின் முன்னாள் கேப்டனான ஆண்ட்ரு ஸ்ட்ராஸ் தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

இந்தியாவின் இரண்டாவது இன்னிங்சில் ஆரம்பத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் இந்திய அணி நெருக்கடியை சந்தித்தது. ஆனாலும் பின்வரிசையில் விளையாடிய வீரர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர். இங்கிலாந்து அணி வீரர்கள் இந்திய அணியின் வீரர்களை உசுப்பேற்றியதால் அவர்கள் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.

shami 2

மேலும் பந்துவீச்சின் போதும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை அவர்கள் தங்களது சிறப்பான பந்து வீச்சின் மூலம் திணறடித்தனர். இந்திய அணி ஐந்தாம் நாள் பெற்ற வெற்றி அவர்களுக்கு தகுதியான ஒன்றுதான். பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இங்கிலாந்து அணி ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாமல் போனது ஏமாற்றமாக இருந்தாலும், இந்திய அணியை அவர்கள் சீண்டியது அவர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

ind

இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசை ஏமாற்றம் தருகிறது. நிச்சயம் மிடில் ஆர்டரில் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. அதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இனி வரும் போட்டிகளில் அணியில் மாற்றம் செய்ய வேண்டியது அவசியம். இந்திய அணியை சீண்டியதால் அவர்கள் தோல்வி அடைந்தனர் என்றும் ஸ்ட்ராஸ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement