2 வருஷமா எல்லாரும் பிளான் பண்ணிட்டாங்க.. இன்ஸ்டாவை பாத்து ஃபார்முக்கு வந்தேன்.. ஆட்டநாயகன் ரசல் பேட்டி

Andre Russell
- Advertisement -

மார்ச் 23ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற ஐபிஎல் டி20 தொடரின் 3வது லீக் போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய கொல்கத்தா 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 208/7 ரன்கள் அடித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர் பில் சால்ட் 54 (40) ரன்கள் அடித்தார். அதே போல லோயர் மிடில் ஆர்டரில் மிரட்டிய ஆண்ட்ரே ரசல் அதிரடியாக விளையாடி 3 பவுண்டரி 7 சிக்சருடன் 64* (24) ரன்களும் ரமந்தித் சிங் ரன்களும் 36, ரிங்கு சிங் 23 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் சார்பில் அதிகபட்சமாக தமிழக வீரர் நடராஜன் 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

இன்ஸ்டாகிராம் ரசல்:
அதைத் தொடர்ந்து 209 ரன்களை சேசிங் செய்த ஹைதராபாத் அணிக்கு மயங் அகர்வால் 32, அபிஷேக் ஷர்மா 32, ராகுல் திரிபாதி 20, ஐடன் மார்க்ரம் 18, அப்துல் சமத் 15 என வீரர்கள் ஆரம்பத்திலேயே பெரிய ரன்கள் எடுக்காமல் அவுட்டானார்கள். அதனால் மிடில் ஆர்டரில் அதிரடியாக விளையாடி போராடிய ஹென்றிச் கிளாசின் அரை சதமடித்து 63 (29) ரன்களும் சபாஷ் அஹ்மத் 16 (5) ரன்கள் எடுத்துப் போராடியும் 20 ஓவரில் ஹைதராபாத் 204/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதனால் 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகள் எடுத்தார். இந்த வெற்றிக்கு பேட்டிங்கில் 64 ரன்கள் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகள் எடுத்து ஆல் ரவுண்டராக அசத்திய ரசல் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் உலகின் பெரும்பாலான பவுலர்கள் தமக்கு எதிராக திட்டங்களை வகுத்துவிட்டதாலேயே கடந்து சில வருடங்களாக அதிரடியாக பேட்டிங் செய்ய முடியவில்லை என்று ரசல் கூறியுள்ளார்.

- Advertisement -

இருப்பினும் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் பதிவிட்ட தனது வீடியோக்களை பார்த்து உத்வேகமடைந்து மீண்டும் ஃபார்முக்கு வந்ததாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் இன்ஸ்டாகிராமில் வரும் வீடியோக்களை பார்த்து நான் எவ்வளவு நன்றாக பந்தை அடிக்கிறேன் என்பதை உணர்ந்தேன். அது நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள் என்பதை காட்டுகிறது. எனவே எனது வழியில் என்ன வந்தாலும் அதற்கு ரியாக்சன் கொடுக்க முயற்சித்தேன். கடந்த 2 வருடங்களாக பவுலர்கள் எனக்கு எதிராக திட்டங்களை வைத்துள்ளனர். நான் ரன்களை தோண்டி எடுத்து வருகிறேன்”

இதையும் படிங்க: 208 ரன்ஸ் சேசிங்.. 8 சிக்ஸர்களை விளாசி வெறித்தனமாக போராடிய கிளாஸின்.. நூலிழையில் வெற்றி கைமாறியது எப்படி?

“எல்லோரும் எனக்காக ஒரு திட்டம் வைத்திருப்பதை நான் அறிவேன். ஆரம்பத்தில் பெஞ்சில் இருந்தேன். என்னை உபயோகப்படுத்த முயற்சித்தேன். கொல்கத்தா அணி எனக்கு நிறைய செய்துள்ளது. இன்றிரவு நான் செய்தது இந்த ஜெர்சி எனக்கு என்ன அர்த்தம் என்பதை நிரூபிக்க ஒரு வழியாகும். இது ஹர்ஷித் ராணாவின் கேரக்டரை காட்டுகிறது. அவர் கடைசி ஓவர் வேண்டும் என்று சொன்னார். அதில் முதல் பந்தில் சிக்சர் கொடுத்தாலும் பின்னர் வலுவாக திரும்பினார்” என்று கூறினார்.

Advertisement