கங்குலி கூட பண்ணதில்ல. ரிஷப் பண்ட் அசால்ட்டா பண்ணிட்டாரு – ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓபன்டாக்

Anderson-3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆனது ஆகஸ்ட் 4ஆம் தேதி இன்று மாலை மூன்று முப்பது மணி அளவில் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்குகிறது. இதற்காக தற்போது இரு அணிகளும் தயாராக உள்ள நிலையில் இந்த தொடரில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய அணிக்கு எதிராக தான் பெற்ற அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார்.

anderson 1

- Advertisement -

மேலும் அதில் இந்திய அணி சார்பில் கங்குலி கூட செய்யாத ஒரு விடயத்தை ரிஷப் பன்ட் செய்ததாகவும் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : கடந்த முறை இந்தியா சுற்றுப்பயணத்தின்போது ரிஷப் பண்ட் நான் வீசிய வேகப்பந்தில் சற்றும் பயமின்றி கீப்பர் தலைக்கு பின்னர் ரிவர்ஸ் ஸ்வீப் ஒன்றினை அடித்தார்.

அதுபோன்று என்னை எதிராக ஒரு துணிச்சலான ஷாட்டை அடித்த வீரரே கிடையாது. அது ஒரு புது பந்து தான் நல்ல வேகம் இருந்தது, பழைய பந்து கூட கிடையாது. இந்திய அணியின் முன்னாள் வீரரான கங்குலி கூட அப்படி ஒரு ஷாட் அடித்து பார்த்திருக்க மாட்டீர்கள். ஆனால் என்னுடைய பந்தில் பண்ட் ஸ்வீப் அடித்தது அழகாக இருந்தது என்று தெரிவித்தார்.

pant-1

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : இதுபோன்று அதிரடியாக வித்தியாசமாக ஆடும் வீரர்களுக்கு எதிராக பந்து வீசுவது எளிது கிடையாது. ஏனெனில் அவர்கள் அதிக ரன்களை குவிக்க நினைப்பல்லை. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இடத்தை பிடிக்கவும் நினைக்காமல் பயமின்றி அடித்து ஆடுகின்றனர். இது பவுலர்களுக்கு சற்று சவால்தான் எனக் கூறினார்.

மேலும் இப்போது வரை ஓய்வின்றி விளையாடி வரும் வருவது குறித்து பேசிய அவர் : தலைமுறை கடந்து விளையாடுவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். இதனால் நல்ல அனுபவம் எனக்கு கிடைத்துள்ளது என அண்டர்சன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement