முதல் பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்து கோல்டன் டக் ஆகிய கோலி – அதுவும் யார் கிட்ட அவுட் ஆனார் தெரியுமா ?

Kohli-3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி ஆகஸ்ட் 4ஆம் தேதி நேற்று நாட்டிங்காம் நகரில் உள்ள டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி தனது முதல் நாள் ஆட்ட நேரத்திற்கு முன்பாகவே 183 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Kohli

அதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 21 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி முதல் நாளை முடித்திருந்தது. இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்நிலையில் இன்று இரண்டாவது நாளை ஆரம்பித்த இந்திய அணி ரோஹித் மற்றும் ராகுல் ஆகியோரின் சிறப்பான ஆட்டம் காரணமாக மிகச் சிறப்பான துவக்கத்தை பெற்றது.

- Advertisement -

சரியான நேரத்தில் முறையான பந்துகளை மட்டுமே அடித்து விளையாடிய அவர்கள் முப்பது ஓவர்களுக்கு மேல் விக்கெட் கொடுக்காமல் விளையாடினார்கள். இறுதியில் 38-வது ஓவரில் போது இந்த ஜோடி பிரிந்தது. தொடக்க வீரரான ரோகித் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

rahul

இந்திய அணி 97 ரன்கள் எடுத்திருந்த போதுதான் முதல் விக்கெட்டை இழந்தது. ஆனால் அதன் பின்னர் தான் சரிவு ஏற்பட ஆரம்பித்தது. அடுத்ததாக களமிறங்கிய புஜாரா நின்று விளையாடுவார் என்று எதிர்பார்த்த வேளையில் 4 ரன்களில் ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின்னர் கேப்டன் கோலி வந்த வேகத்திலேயே தான் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

kohli

அதிலும் குறிப்பாக இந்த தொடரில் கோலியின் விக்கெட்டுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று கணிக்கப்பட்ட ஆண்டர்சன் இடமே அவர் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த ரகானேவும் 5 ரன்களில் ஆட்டமிழக்க தற்போது இந்திய அணி 112 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தற்போது விளையாடி வருகிறது.

Advertisement