முரளிதரனுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய ஆண்டர்சன் – விவரம் இதோ

anderson
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 25ஆம் தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்கி நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் சரிவுக்கு முக்கிய காரணமாக அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஆண்டர்சன் திகழ்ந்தார்.

Anderson

- Advertisement -

முதல் இன்னிங்சில் இந்திய அணி 78 ரன்களுக்கு ஆல்அவுட்டாக முக்கிய காரணமாக இருந்த ஆண்டர்சன் இந்திய அணியின் டாப் 3 வீரர்களை வீழ்த்தி அசத்தினார். அதுமட்டுமின்றி இரண்டாவது இன்னிங்சில் ஒரு விக்கெட்டை வீழ்த்திய அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 630 விக்கெட்டுகளை இதுவரை கைப்பற்றியுள்ளார்.

இரண்டாவது இன்னிங்ஸ்-இன் போது ரஹானேவை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் அரங்கில் ஒரு தனித்துவமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். அதாவது டெஸ்ட்டில் இங்கிலாந்து மண்ணில் அவர் தனது 400 ஆவது விக்கெட்டாக ரஹானேவின் விக்கெட்டை வீழ்த்தினார். இதுவரை 94 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து மண்ணில் விளையாடியுள்ள அவர் 179 இன்னிங்ஸ்களில் பந்துவீசி 9610 ரன்களை விட்டுக்கொடுத்து இந்த 400 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

anderson 2

இங்கிலாந்து மண்ணில் அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 42 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டையும், ஒரே போட்டியில் 71 ரன்கள் கொடுத்து 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது அவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்துள்ளது. இதற்கு முன்னர் தனது தாய் மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக இலங்கை அணியை சேர்ந்த ஜாம்பவான் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் திகழ்கிறார்.

அவர் இலங்கை நாட்டில் 493 விக்கெட்டுகளை வீழ்த்தி சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக உள்ளார். அவரை தொடர்ந்து தற்போது சொந்த மண்ணில் 400 விக்கெட் வீழ்த்திய இரண்டாவது பந்துவீச்சாளராக ஆண்டர்சன் தனது சாதனையை பதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement