டெஸ்ட் கிரிக்கெட்டில் அஷ்வினின் சாதனையை முந்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் – ரொம்ப லேட் தான்

Anderson-3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுகளை இழந்து 276 ரன்கள் குவித்து இருந்தது. ராகுல் 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இந்நிலையில் 2 ஆம் நாள் ஆட்டத்தின் துவக்கத்திலேயே மேலும் 2 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில் 129 ரன்களுக்கு ஆட்டமிழந்தது வெளியேறினார். அதன் பின்னர் ரஹானே ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

Rahul-1

- Advertisement -

பின்வரிசையில் பண்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன் குவிப்புக்கு உதவினர். பண்ட் 37 ரன்களையும், ஜடேஜா 40 ரன்களும் குவித்தனர். இறுதியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இங்கிலாந்து தனது இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 119 ரன்களை குவித்துள்ளது.

ரூட் 48 ரன்னுடனும், பேர்ஸ்டோ 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணியின் அனுபவ வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் சரிவுக்கு காரணமாக இருந்தது மட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வினின் சாதனை ஒன்றையும் கடந்துள்ளார். அதன்படி அந்த சாதனை யாதெனில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை அதிகமுறை வீரர்களின் பட்டியலில் 6வது இடத்தில் இருந்த அஸ்வினை முந்தி தற்போது ஆண்டர்சன் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 31 ஒருமுறை ஆண்டர்சன் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போன்று லார்ட்ஸ் மைதானத்தில் இயான் போத்தம்க்கு அடுத்து அதிக 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக ஆண்டர்சன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

anderson 2

ஆனாலும் ஆண்டர்சன் படைத்த இந்த சாதனை ரொம்பவே தாமதம் என்று கூறலாம். ஏனெனில் 163 வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் ஆண்டர்சன் இதுவரை 31 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே வேளையில் தமிழக வீரரான அஷ்வின் 79 போட்டிகளில் மட்டுமே விளையாடி 30 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் 413 விக்கெட்களை வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement