இந்திய அணிக்கு எதிராக யாரும் படைக்காத இமாலய சாதனையை படைத்த ஆண்டர்சன் – விவரம் இதோ

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 578 ரன்களை குவித்தது. அதை தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ரிஷப் பண்ட், புஜாரா, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தினால் 337 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத்தொடர்ந்து 241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

Sundar 2

- Advertisement -

அதிகபட்சமாக அஸ்வின் 6 விக்கெட்டுகளையும், நதீம் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனைத் தொடர்ந்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது வரை நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை இழந்து 39 ரன்கள் குவித்தது.

மேலும் 386 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி நாளை கடைசி நாளில் விளையாடிய இந்திய அணி 192 ரன்களுக்கு ஆட்டமிழந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் 17 ஓவர்களை வீசி ஆண்டர்சன் 46 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்சில் போது 11 ஓவர்கள் வீசி 17 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

anderson

இவர் வீழ்த்திய இந்த ஐந்து விக்கெட்டுகள் இன் மூலம் இந்திய அணிக்கு எதிராக இவர் ஒரு இமாலய சாதனை படைத்துள்ளார். அந்த சாதனை யாதெனில் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

anderson 1

இதுவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்திய அணிக்கு எதிராக 114 விக்கெட்களை கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை ஆண்டர்சன் நிகழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement