கிரிக்கெட்டில் நேர்மைக்கு ராகுல் ட்ராவிடை உதாரணம் காட்டிய ஆஸ்திரேலியா அதிரடி ஆட்டக்காரர் !

dravid
- Advertisement -

தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கேமரூன் பேன்கிராப்ட் திட்டமிட்டு பந்தை சேதப்படுத்தியது வீடியோவில் அம்பலமானது.முதலில் மறுத்த அவர் பின்னர் சகவீரர்களின் தூண்டுதலின் பெயரில் தான் இந்த சம்பவம் நடந்தது எனக்கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

rahul

- Advertisement -

இதன் பின்னர் செய்த தவறை ஒப்புக்கொண்டு கேப்டன் மற்றும் துணைக்கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தும் வார்னரும் பதவி விலகினர்.பின்னர் இந்த சம்பவத்தை விசாரித்த பின் ஐசிசி அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்க, ஆஸ்திரேலிய நிர்வாகமும் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவுசெய்து வருகின்றனர்.ஆஸ்திரேலியாவின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் தற்போதைய சென்னை அணியின் பேட்டிங் கோச்சருமாகிய மைக் ஹஸ்ஸி இதுகுறித்து கூறியுள்ள கருத்தில் “ஆஸ்திரேலிய அணி தற்போது இழந்துள்ள நற்பெயரை மீட்க நிறைய காலமெடுக்கும்.

mike

என்னை பொறுத்தவரையில் கிரிக்கெட்டில் நேர்மையான வீரர் என்றால் சட்டென நினைவுக்கு வருவது ராகுல் டிராவிட் தான். அவர் 28 சதங்கள் அடித்திருந்தாலும் ஒருபோதும் யாரையும் ஏமாற்றி ஆட நினைத்ததேயில்லை என்று ராகுல் டிராவிட்டை புகழ்ந்து பேசியுள்ளார்.

Advertisement