இந்திய அணிக்கு தொடர்ந்து பல திறமையான இளம்வீரர்கள் கிடைக்க இதுவே காரணம் – அமித் மிஸ்ரா ஓபன் டாக்

- Advertisement -

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் லீக் தொடர் ஆக இந்தியாவின் இந்தியர் பிரீமியர் லீக் இருந்து வருகிறது. டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் தற்போது உலகெங்கும் நடப்பதற்கு அஸ்திவாரமாக அமைந்தது ஐ.பி.எல் தொடரின் மூலம் தான் என்றால் அது மிகையல்ல. டி20 லீக் கிரிக்கெட் தொடருக்கெல்லாம் இதுதான் தாய் என்ற அளவிற்கு மாறிவிட்டது. 2008ஆம் ஆண்டு முன்னாள் ஐபிஎல் சேர்மன் லலித் மோடி மற்றும் கபில்தேவ் ஆகியோரின் முயற்சியால் உருவானது குறிப்பிடத்தக்கது.

Mishra 1

- Advertisement -

அப்போதிலிருந்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. தோனி, விராட் கோலி ,ரோகித் சர்மா போன்ற வீரர்களும் ஐபில் கிரிக்கெட்டிற்கு பெரும்பங்கு அளித்துள்ளனர். அதனைத் தாண்டி ஐபிஎல் கிரிக்கெட் மூலமாக இந்திய அணியின் இளம் வீரர்களின் கனவு மெய்ப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் முன்னாள் வீரரான அமித் மிஸ்ரா ஐபிஎல் போட்டிகள் குறித்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : ஐபிஎல் போட்டிகள் மூலம் இந்திய அணிக்கு பல இளம் திறமையான வீரர்கள் கிடைத்துள்ளனர். டெல்லி அணியில் பல திறமையான இளம் வீரர்கள் இருக்கின்றன. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளும் இவர்களை காணலாம் என்று கூறியுள்ளார்.

Mishra

மேலும், கூறிய அவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா மைதானத்தில் ஆடுவது தனக்கு பிடிக்கும் எனவும் தன்னுடைய ரோல்மாடல் வீரர் சச்சின் டெண்டுல்கர் எனவும் குறிப்பிட்டுள்ளார் . மேலும் சுழற்பந்து வீச்சில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே ஆகியோர்தான் தனக்கு முன்னோடிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இவர் கூறியதை போலவே சஞ்சு சாம்சன், ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பந்த், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்திக் பாண்டியா மற்றும் விஜய் சங்கர் போன்ற பல இளம் வீரர்கள் ஐபிஎல் தொடரின் மூலம் தான் இந்திய அணிக்கு கிடைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல் மூலம் தங்களது திறமையை நிரூபிக்கும் வீரர்களுக்கு நிச்சயம் இந்திய அணியில் இடம்கிடைக்கும் என்றே கூறலாம்.

Advertisement