லவ்வருடன் டேட்டிங் போகனும் ரூ300 குடுங்க. கமெண்ட் மூலம் உதவி கேட்ட ரசிகர் – அமித் மிஸ்ரா குடுத்த சர்ப்ரைஸ்

Amit Mishra
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா எப்பொழுதுமே சமூக வலைதள பக்கத்தின் மூலம் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் லெஜன்ட் லீக் போட்டியில் சுரேஷ் ரெய்னா பிடித்த அற்புதமான கேட்ச் வீடியோ ஒன்றினை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து சுரேஷ் ரெய்னாவிற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். அந்த பதிவிற்கு பல்வேறு ரசிகர்களும் தங்களது கமெண்டின் மூலம் பல கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

அதில் ஒரு ரசிகர் மிகவும் வித்தியாசமான முறையில் தனது காதலியுடன் டேட்டிங் செல்ல ரூபாய் 300 தேவைப்படுவதாகவும் அதனை கொடுத்து உதவுமாறும் வேண்டுகோள் வைத்திருந்தார். இதையடுத்து மற்றொரு நபர் பணம் கேட்ட அந்த நபரிடம் உங்களது யுபிஐ விவரங்களை பகிர்மாறு ரிப்ளை செய்திருந்தார்.

- Advertisement -

உடனே அந்த ரசிகரும் தனது கூகுள் பே எண்ணை மற்றொரு கமெண்டாக அளித்து இருந்தார். பின்னர் உடனடியாக அந்த குறிப்பிட்ட கூகுள் பே எண்ணிற்கு 500 ரூபாய் அனுப்பி வைத்த அமித் மிஸ்ரா பணம் அனுப்பிய அந்த ஸ்க்ரீன் ஷாட்டை எடுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் தனிப் பதிவாக பகிர்ந்தார்.

மேலும் அந்த பதிவில் “உங்களுடைய டேட்டிங் சிறப்பாக நடக்க எனது வாழ்த்துக்கள்” என்று பணம் பெற்ற அந்த நபரை வாழ்த்தி 500 ரூபாயை அனுப்பிய ஸ்க்ரீன் ஷாட்டையும் பகிர்ந்தார். அமிர் மிஸ்ரா கொடுத்த இந்த சர்ப்ரைஸை எதிர்பாராத அந்த ரசிகரும் விரைவில் உங்களது 500 ரூபாயை திருப்பித் தருகிறேன் என்று கமெண்ட் செய்துள்ளார்.

- Advertisement -

ரசிகரின் வேண்டுகோளை ஏற்று அமித் மிஸ்ரா செய்த இந்த செயல் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதோடு இந்த பதிவினை கண்ட நெட்டிசன்கள் பலரும் அமித் மிஸ்ராவின் ட்விட்டர் பக்கத்தில் பல்வேறு விதங்களில் உதவி கேட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக மற்றொரு ரசிகர் : ஹைதராபாத்தில் ஸ்பெஷல் பிரியாணி சாப்பிட ஆசைப்படுகிறேன். எனக்கு ஒரு 500 ரூபாய் அனுப்பி வைக்குமாறு கமெண்ட் செய்துள்ளார்.

இதையும் படிங்க : பவுலராவது, பிட்ச்சாவது, கண்டிஷனாவது எதுமே இவரது பேட்டிங்கை பாதிக்காது – இந்திய வீரரை பாராட்டிய கைப்

இப்படி தொடர்ச்சியாக பல்வேறு ரசிகர்கள் பலவிதமாக தங்களது உதவிகளை அவரது டிவிட்டர் பக்கத்தின் மூலம் கேட்டு வருகின்றனர். அமித் மிஸ்ராவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement