இந்திய அணியில் மீண்டும் விளையாட காத்திருக்கிறேன். கண்டிப்பா அழைப்பு வரும் – சீனியர் வீரர் அதிரடி பேட்டி

Ind
- Advertisement -

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட பாதிப்பு காரணமாக கடந்த நான்கு மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது தான் இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான தொடர் மற்றும் இங்கிலாந்து அயர்லாந்து அணிகளுக்கிடையிலான தொடர் நடந்து முடிந்துள்ளது.

Ind

- Advertisement -

இந்நிலையில் சமூக வலைதளம் மூலம் பல பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்களும் தங்களது கருத்துகளையும் அனுபவங்களையும் ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது கிரிக்கெட் டாட் காம் என்ற இணைய தளத்திற்கு பேட்டியளித்துள்ள இந்திய சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : நான் இப்போதும் கிரிக்கெட்டை தொடர்ந்து விளையாடுவதற்கு காரணமே நிச்சயம் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறுவேன் என்ற நம்பிக்கை தான். எப்போது வேண்டுமானாலும் எனக்கு அழைப்பு வரலாம் ஆகவே நான் விளையாட தகுதி வாய்ந்ததாகும் முழு உடல் தகுதியும் இருக்க வேண்டும்.

அந்த நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு நான் எப்போதும் எதிர்மறையான எண்ணங்களில் இருந்து விலகியே இருப்பேன். பொதுவாக எதிர்பார்ப்புகள் இல்லாமல் கடினமாக உழைப்பை கொடுக்க பாடுபடவேண்டும் என்று பேசினா.ர் மேலும் சாதிப்பதற்கு வயது ஒரு தடை அல்ல என்றும் ஒரு வீரன் நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் விளையாட முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

Mishra

இந்திய அணிக்காக அமித் மிஸ்ரா இதுவரை 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 64 விக்கெட்டுகளையும் 22 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 76 விக்கெட்டுகளையும் 10 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகளையும் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement