- Advertisement -
இந்திய கிரிக்கெட்

விராட் கோலியால் 2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு சான்ஸ் கிடைப்பது கஷ்டம்.. மிஸ்ரா விமர்சனம்

டெல்லியைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் மிஸ்ரா இந்தியாவுக்காக 2003 – 2017 வரையிலான காலகட்டங்களில் 3 வகையான ஃபார்மெட்டிலும் கணிசமான போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் ஐபிஎல் தொடரில் 3 முறை ஹாட்ரிக் எடுத்த ஒரே பவுலராகவும் அவர் சாதனை படைத்துள்ளார். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் விரிவான பேட்டி கொடுத்த அவர் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் தமக்கு போதுமான வாய்ப்பு கொடுக்கவில்லை என்று விமர்சித்துள்ளார்.

அத்துடன் முதல் நாளில் பார்த்தது போலவே இப்போதும் ரோஹித் சர்மா இருப்பதாக அவர் தெரிவித்தார். ஆனால் புகழ் மற்றும் அதிகாரம் வந்ததும் விராட் கோலி மொத்தமாக மாறி விட்டதாக அமித் மிஸ்ரா கூறியிருந்தார். குறிப்பாக 14 வயதில் பார்த்த விராட் கோலியை தற்போது பார்க்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

சாம்சன் வாய்ப்பு:
அது போக கௌதம் கம்பீர் தான் பெரிய இதயத்துடன் தாமாக சென்று பேசி பிரச்சினையை முடித்தாரே தவிர விராட் கோலி பேசவில்லை என்றும் அமித் மிஸ்ரா கூறியிருந்தார். இந்நிலையில் அதே பேட்டியில் இங்கிருந்து அற்புதமாக விளையாடினால் மட்டுமே 2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

ஏனெனில் 30 வயதை கடந்த வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படக்கூடாது என்ற எழுதப்படாத விதிமுறையை விராட் கோலி கேப்டனாக இருந்த போது இந்திய அணியில் கொண்டு வந்ததாக அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். அதை வைத்தே விராட் கோலி கழற்றிவிட்டதாக மறைமுகமாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “சஞ்சு சாம்சனுக்கு எளிதாக வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைக்கவில்லை”

- Advertisement -

“ஏனெனில் அவர் இளம் வயதை கடந்து விட்டார். இளம் வீரர்கள் தான் டி20 கிரிக்கெட்டில் அதிகமாக அசத்துவார்கள். எனவே அவர்கள் தான் இந்திய அணிக்கு அதிகம் தேவை என்ற கான்செப்ட்டை விராட் கோலி அறிமுகப்படுத்தினார். ஆனால் விராட் கோலியின் வயது 35. எனவே சஞ்சு சாம்சன் வாய்ப்பை பெற வேண்டுமெனில் அபாரத்துக்கும் அதிகமான செயல்பாடுகளை வெளிப்படுத்த வேண்டும்”

இதையும் படிங்க: ஜிம்பாப்வே தொடரில் கில் எதுக்கு? தங்கப்பதக்கம் வாங்குன அவரை கேப்டனா போட்ருக்கலாம்.. மிஸ்ரா அதிருப்தி

“தற்போது அணியில் இருக்கும் அவர் அடுத்த 2 வருடங்கள் தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் உலகக் கோப்பை வாய்ப்பு கிடைக்கும். இல்லையேல் இஷான் கிசான், ரிஷப் பண்ட், துருவ் ஜுரேல், ஜிதேஷ் சர்மா போன்ற நீண்ட வரிசையில் இளம் வீரர்கள் காத்திருக்கின்றனர்” சம்பந்தமின்றி தடாலடியாக கூறினார். இந்த சூழ்நிலையில் தற்போது 29 வயதாகும் சஞ்சு சாம்சன் 2026இல் 31 வயதை கடந்து விடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -