டெல்லியை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அமித் மித்ரா இந்தியாவுக்காக 2003 – 2017 வரையிலான காலகட்டங்களில் 22 டெஸ்ட், 36 ஒருநாள், 8 டி20 போட்டிகளில் விளையாடினார். குறிப்பாக அனில் கும்ப்ளே ஓய்வுக்குப் பின் தோனி தலைமையிலான இந்திய அணியில் அவர் முதன்மை ஸ்பின்னராக உருவெடுக்க தொடங்கினார். ஆனால் அதே காலகட்டத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் அறிமுகமானார்கள்.
அவர்கள் மிஸ்ராவை விட பேட்டிங்கில் கொஞ்சம் ரன்கள் குவிக்கும் திறமையை வெளிப்படுத்தி ஸ்பின்னராகவும் அசத்தினார்கள். அதனால் இவரை கொஞ்சம் கொஞ்சமாக தோனி ஓரம் கட்டினார். அதைத்தொடர்ந்து கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலியும் அவருக்கு பெரிய வாய்ப்புகளை கொடுக்கவில்லை. இந்நிலையில் அணிக்கு பொருத்தமற்றவராக இருப்பதால் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது என்று தோனி தம்மிடம் நேரடியாக சொன்னதாக அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.
மிஸ்ரா ஆதங்கம்:
ஆனால் விராட் கோலி வாய்ப்பு தருகிறேன் என்று சொல்லி விட்டு கூப்பிடவே இல்லை என்றும் அவர் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்திய அணியில் தேர்வு பெற நல்ல கிரிக்கெட்டை விளையாடினால் மட்டும் போதாது. தோனியுடன் எனக்கு நல்ல உறவு இருந்தது. அதனால் நான் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்று அவரிடம் 2 முறை கேட்டேன். அதற்கு காம்பினேஷன் பொருந்தவில்லை என்று தோனி கூறினார்”
“அத்துடன் எனக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் 10 டெஸ்ட் போட்டிகளில் கூட விளையாடாத எனக்கு எதற்கு ஓய்வு? அதைப்பற்றி பயிற்சியாளரிடம் கேட்ட போது தோனியிடம் கேட்குமாறு சொன்னார். இருப்பினும் தோனியிடம் நான் கேட்கவில்லை. பயிற்சியாளரிடம் மீண்டும் கேட்ட போது உங்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதாக சொன்னார். 5 வருடங்களுக்கு முன்பு ஐபிஎல் தொடரில் முழங்கால் காயத்தை சந்தித்தது என்னுடைய கேரியரை இன்னும் மோசமாக்கியது”
“முன்பெல்லாம் ஒருவர் விளையாடிக் கொண்டிருக்கும் போது காயமடைந்தால் குணமடைந்த பின் மீண்டும் தாமாக தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் காயத்துக்கு முன் நியூசிலாந்துக்கு எதிராக தொடர் நாயகன் மற்றும் ஆட்டநாயகன் விருது வென்றும் எனக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கும்ப்ளே, சஹா, பாண்டியா போன்றவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. எனக்கு கிடைக்கவில்லை”
“ஐபிஎல் தொடரில் பெங்களூருவுக்கு எதிரான கடைசிப் போட்டியில் விராட் கோலியிடம் எனது கேரியர் பற்றி கேட்டேன். அதற்கு வாய்ப்பு வரும் போது சொல்கிறேன் என்று விராட் கோலி சொன்னார். அதை தொடர்ந்து 2016 இலங்கைத் தொடரில் எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது என்னைப் போல நீங்களும் ஃபிட்னஸ் பெறுங்கள் என்று விராட் கோலி சொன்னார்”
இதையும் படிங்க: சச்சின், என்னால கூட நெருங்க முடியாது.. அந்த வெ.இ வீரர் அப்படிப்பட்ட அற்புதமான பிளேயர்.. லாரா பாராடு
“அதற்கு உங்களைப்போல் எடை தூக்க முடியாது ஆனால் நீங்கள் சொல்லும் தூரம் என்னால் ஓட முடியும் என்று அவரிடம் நான் சொன்னேன். அதன் பின் காயத்தை சந்தித்த நான் அவருக்கு மெசேஜ் செய்தேன். அதற்கு வாய்ப்பு வரும் போது சொல்கிறேன் என்று விராட் கோலி சொன்னார். ஆனால் அதன் பின் மெசேஜே வரவில்லை” என்று கூறினார்.



