என்ன ஆணவம் ! பிறந்தநாளில் சச்சினை மறைமுகமாக கலாய்த்த இங்கிலாந்து – இந்திய ரசிகர்கள் கோபம்

Sachin Tendulkar
- Advertisement -

இந்தியாவின் நட்சத்திர முன்னாள் வீரர் மற்றும் ஒட்டுமொத்த கிரிக்கெட் வரலாற்றின் மகத்தான ஜாம்பவானாக கருதப்படும் சச்சின் டெண்டுல்கர் நேற்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடினார். கடந்த 1973-ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த அவர் கிரிக்கெட் விளையாட்டின் மீது இருந்த ஆர்வத்தால் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் 16 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் தனது பிஞ்சு காலடியை வைத்தார். அதுவும் 1989-ஆம் ஆண்டு முதல் முறையாக பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சி நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் அறிமுகமான அவர் வாசிம் அக்ரம், இம்ரான் கான், வக்கார் யூனிஸ் போன்ற உலகையே அச்சுறுத்திய அதிரடி வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டார்.

அதன்பின் காலடி வைத்த ஒரு சில வருடங்களிலேயே இந்திய பேட்டிங் துறையின் முக்கிய வீரராக உருவெடுத்த அவர் தனது அபார திறமையால் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்தார்.

- Advertisement -

மகத்தான சச்சின்:
குறிப்பாக 90 களில் அட்டகாசமாக பேட்டிங் செய்த அவர் இந்திய அணியின் முதுகெலும்பாக மாறத் தொடங்கினார். சொல்லப்போனால் அந்த சமயங்களில் சச்சின் அடித்தால்தான் இந்தியா வெற்றி இல்லையேல் தோல்வி என்ற நிலைமையால் அவர் அவுட்டானதும் இந்தியாவில் ஆப் செய்யப்பட்ட தொலைக்காட்சிகள் லட்சக்கணக்கில் இருந்தன. காலப்போக்கில் தனது அற்புதமான பேட்டிங் திறமையால் ரன் மெஷினாக மாறி அவர் பல ஆயிரம் ரன்களை குவித்த தொடங்கி இந்தியாவிற்கு பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுக்கும் வெற்றி நாயகனாக பல சாதனைகளை படைக்கத் தொடங்கினார்.

ஒருசில பேட்ஸ்மேன்கள் சதங்கள் அடிப்பதற்கு தடுமாறிக் கொண்டிருந்த நிலையில் இந்திய மண்ணில் மட்டுமல்லாது உலகின் அனைத்து இடங்களிலும் ஆஸ்திரேலியா போன்ற உலகத்தரம் வாய்ந்த அணிகளையும் புரட்டி எடுத்த அவர் சதங்கள் மேல் சதங்கள் விளாசினார். அதேப்போல் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்போதுமே இரட்டை சதம் அடிக்கவே முடியாது என்ற நிலைப்பாடு இருந்த நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக குவாலியர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதல் முறையாக இரட்டை சதமடித்த சச்சின் டெண்டுல்கர் 200* ரன்கள் குவித்து ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக சதமடித்த பேட்ஸ்மேன் என்ற சரித்திரத்தை படைத்தார்.

- Advertisement -

சதங்களின் நாயகன்:
அதேபோல் 1992 முதல் நடந்த 5 உலக கோப்பைகளிலும் முடிந்த அளவுக்கு ரன்களை குவித்து இந்தியாவிற்கு கோப்பையை வென்று கொடுக்க போராடிய அவர் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்தார். அந்த நிலையில் 2011-ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெற்ற உலக கோப்பையில் 2 சதங்கள் உட்பட அதிக ரன்கள் குவித்த இந்திய பேட்ஸ்மனாக சாதனை படைத்த அவர் எம்எஸ் தோனி தலைமையில் 28 வருடங்கள் கழித்து உலக கோப்பையை இந்தியா முத்தமிடுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

1992 – 2007 வரை 5 உலக கோப்பைகளை வெல்ல முடியாமல் தவித்து வந்த அவர் கடைசியில் தனது சொந்த ஊரான மும்பை மண்ணில் உலக கோப்பையை வென்று அசத்தினார். 24 வருடங்களாக இந்திய பேட்டிங் துறையை தனது தோளில் சுமந்த அவருக்கு உலக கோப்பையை வென்று சமர்ப்பணம் செய்த இந்திய அணியினர் அவரை தோளில் சுமந்து கௌரவப்படுத்தியதெல்லாம் எப்போதும் மறக்க முடியாது.

- Advertisement -

அதேபோல் 2012-இல் வங்கதேசத்துக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் 100-வது சதத்தை விளாசிய அவர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த ஒரே பேட்ஸ்மேனாக உலக சாதனை படைத்தார். அத்துடன் ஒருநாள், டெஸ்ட் மற்றும் ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட் என அனைத்திலும் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள அவர் கடந்த 2013இல் ஓய்வு பெற்றார்.

கேலி செய்த இங்கிலாந்து:
அப்படிப்பட்ட கிரிக்கெட்டின் மகத்தான மாணிக்கமான அவரின் 49-வது பிறந்தநாளில் முன்னாள் இந்நாள் வீரர்களும் ரசிகர்களும் பல ஜாம்பவான்களும் மனதார வாழ்த்து தெரிவித்தனர்.

ஆனால் இங்கிலாந்தின் அதிகாரப்பூர்வ ரசிக பட்டாளமான பார்மி ஆர்மியினர் இங்கிலாந்துக்கு எதிராக சச்சின் அவுட்டாகி சென்றது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்து கலாய்த்தது இந்திய ரசிகர்களை கோபமடைய வைத்தது.

அதனால் ஆத்திரமடைந்த பல ரசிகர்களும் தற்போது இங்கிலாந்து ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து திட்டி தீர்த்து வருகிறார்கள். குறிப்பாக 100 சதங்களில் முதல் சதத்தை இங்கிலாந்து மண்ணில் பதிவு செய்த புகைப்படம் உள்ளிட்ட இங்கிலாந்துக்கு எதிராக சச்சின் படைத்த பல சாதனைகளை அடங்கிய புகைப்படத்தை இதற்காகவே தயார் செய்த முன்னாள் இந்திய வீரர் அமித் மிஸ்ரா அதை இங்கிலாந்து ரசிகர்களுக்கு பதிலடியாக பதிவிட்டுள்ளார்.

Advertisement