- Advertisement -
உலக கிரிக்கெட்

IND vs PAK : போட்டி துவங்கிய மூன்றாவது ஓவரிலேயே அம்பயரிடம் திட்டு வாங்கிய – அமீர்

உலகக் கோப்பை தொடரின் 22ஆவது போட்டி இன்று மான்செஸ்டர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும், சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன.

இந்தப் போட்டிக்கான வரவேற்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக காணப்பட்ட நிலையில் போட்டி தற்போது துவங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பராஸ் அகமது முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி தற்போது இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான முகமது அமீர் முதல் ஓவரை வீசிய மெய்டென் செய்தார். அதன் பிறகு மூன்றாவது ஓவரை வீச வந்த அமீர் மூன்றாவது பந்தை வீசிய பிறகு ஆடுகளத்தின் நடுப்பகுதியில் ஓடினார். ஆடுகளத்தில் நடுப்பகுதி என்பது டேஞ்சர் ஏரியா என்று அழைக்கப்படும். அந்த பகுதியில் பேட்ஸ்மேனோ அல்லது பவுலரோ யாருமே ஓடக்கூடாது.

ஆனால் அந்தப்பகுதியில் அமீர் ஓடினார். பிறகு ஐந்தாவது ஓவரிலும் மீண்டும் அதே போன்று ஓடினார் இதனால் அவருக்கு அம்பயர் இரண்டு முறை எச்சரிக்கை விடுத்துள்ளார். மூன்றாவது முறை அப்படி அவர் ஓடினால் அவர் பந்து வீச இந்த போட்டியில் தடை செய்ய படுவார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இந்திய அணி 21 ஓவர்கள் முடிவில் 112 ரன்கள் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by