ஓரம்கட்டப்படும் அம்பத்தி ராயூடு.! இந்திய ஏ, பி, ரெட், கிரீன், புளு அணிகளில் பெயர் இல்லை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்

தற்போது இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அம்பதி ராயுடு ‘யோ யோ’ டெஸ்டில் தேர்ச்சி அடையாததால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் ஜுனியர் சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆலோசகராக நிர்ணயிக்கபட்டிருந்தார் அம்பதி ராயுடு.

ambathirayudu1

இந்நிலையில் சமீபத்தில் இந்திய ஏ,பி அணி, ரெட் அணி போன்ற அணிகளுக்கான வீரர்கள் பட்டியலை பிசிசிஐ நிர்வாகம் அறிவித்திருந்தது. ஆனால், அதில் எந்த அணியிலும் அம்பதி ராயுடுவின் பெயர் இடம்பெறவில்லை. ஏற்கனேவே இந்திய அணியில்அம்பதி ராயுடு தேர்வாகியும் ‘யோ யோ’ டெஸ்டில் தேர்வாகாமல் இருந்ததால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்தது.

தற்போது இந்திய ஏ அணியிலும் அம்பதி ராயுடு புறக்கணிக்கபட்டுள்ளது மற்றுமொரு சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் சமீபத்தில் வந்த தகவலின்படி”இந்திய அணி ‘யோ யோ’ தேர்வில் மிகவும் கண்டிப்பாக உள்ளது. கடந்த மாதம் நடைபெற்ற ‘யோ யோ’ தேர்வில் அம்பதி ராயுடு தேர்ச்சியடையவில்லை. இன்னும் இரண்டு வாரத்திற்குள் அவர் தேர்ச்சி பெற்றால் தான் அவருக்கு வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாட வாய்ப்பளிக்கபடும்” என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

ambathirayudu

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் ராயுடு மற்றும் சுரேஷ் ரெய்னா இடம்பெற்றிருந்தனர். சென்னை அணியில் சிறப்பாக விளையாடி வந்த ராயுடு 602 ரன்களை குவித்து இந்த சீசனில் அதிக ரன்களை குவித்த டாப் 5 பேட்ஸ்மேன்கள் பட்டியலிலும் இடம்பெற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.